தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போர்க்களமானது தில்லி எம்.ஏ.பேபி, பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் கைது; தலைநகரையே சிறைக்கூடமாக்கியது மோடி அரசு!

10 Oct 2026, 10:27 pm
போர்க்களமானது தில்லி எம்.ஏ.பேபி, பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் கைது; தலைநகரையே சிறைக்கூடமாக்கியது மோடி அரசு!

போர்க்களமானது தில்லி எம்.ஏ.பேபி, பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் கைது; தலைநகரையே சிறைக்கூடமாக்கியது மோடி அரசு!

புதுதில்லி, அக்.10– பதிமூன்று கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்களை நீக்கிய தலைமை தேர் தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கேட்ட ஒரே காரணத்துக் காக, நாட்டின் தலைநகரையே சிறைக்கூடமாக மாற்றியது மோடி அரசு. ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட அமைதிப் போராட்டத்தைத் தடுக்க, பல்லாயிரக்கணக் கான காவலர்களும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர். இரும்புத் தடுப்புகளும் ஆணிப் பட்டைகளும் டிரோன்களும் சூழ, தில்லி போர்க்களமாகக் காட்சியளித்தது.

இரவோடு இரவாகத் தொடங்கிய வேட்டை

வெள்ளிக்கிழமை இரவே அடக்குமுறை தொடங்கி விட்டது. போராட்டம் தொடங்கும் முன்பே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளிலும் வீதிகளிலும் சிறைப்பிடிக்கப்பட்டனர். நாற் பத்தாறுக்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன; இருநூற்றைம்பதுக்கும் மேற் பட்ட ரயில்கள்ரத்தானதாகத் தகவல்; கைபேசி இணையம் துண்டிக்கப்பட்டது. போராட்டத் துக்கென்றே ஒதுக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் கூடுவதற்கே அனுமதி மறுக்கப்பட்டது. சத்ரசால் உள்ளிட்ட விளையாட்டு மைதானங்கள் தடுப்பு முகாம்களாக்கப்பட்டன. சனிக்கிழமை மாலைக் குள் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதானதாகஅதிகாரிகளே ஒப்புக்கொண்டனர்; பிற்பகல் இரண்டு மணிக்கே இந்த எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தொட்டது.

தலைவர்கள் மீது பாய்ந்த காவல்துறை

கேரள இல்லத்திலிருந்து பேரணியாகப் புறப் பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, பிருந்தா காரத், எம்.வி. கோவிந்தன், கே.கே. சைலஜா உள்ளிட்டோர் வாசலிலேயே கைது செய்யப்பட்டனர். பினராயி விஜயன், ஜான் பிரிட்டாஸ், கே.என். பாலகோபால் ஆகிய மூவர் மட்டும் நடந்து சென்றபோதும், “நான்கு பேருக்கு மேல் கூடாது” என்று கூறித் தடுத்துக் கைது செய்தனர். சுர்ஜித் பவனிலிருந்து புறப்பட்டபி.வி.ராகவலு, விஜூ கிருஷ் ணன், மரியம் தாவ்லே, மாணிக் சர்க்கார் உள் ளிட்டோர் மின்டோ சாலையில் பிடிக்கப்பட்டனர்.

பொதுச் செயலாளரையும் மூத்த தலைவர்களையும் காவலர்கள் கொடூரமாகத் தள்ளி இழுத்துச் சென்றனர்.“இது ஜனநாயகப் படுகொலை. இந்தப் போராட்டம் இன்றோடு முடியாது” என்று முழங்கினார் பினராயி விஜயன்.

விமானத்துக்குள்ளும் நுழைந்த அடக்குமுறை

போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த கரப் பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை, விமானம் தரையிறங்கிய உடனேயே உள்ளே நுழைந்து காவலர்கள் கைது செய்தனர். “இந்திரா காந்தி கூட இப்படிச் செய்ததில்லை” என்றார் அவர். யூடியூபர் துருவ் ரத்தீ வீட்டிலேயே சிறைப்பிடிக்கப்பட்டார். பேருந்து நிறுத் தத்தில் தர்ணா செய்த மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண், மாணவர் தலைவர் நேஹா போரா என யாரும் தப்பவில்லை.ஏ.கே.ஜி. பவனிலிருந்து புறப்பட்ட இந்திய மாணவர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத்தினர் நானூறுக்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

மாணவர்களிடம் தவறாக நடந்த ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி ஏ.ஏ. ரஹீம் எம்.பி. காவலிலேயே உண்ணாவிரதம் அறிவித்தார். உச்சநீதிமன்றம் அருகே பேரணி சென்ற வழக்கறிஞர்களும் இழுத்துச் செல்லப்பட்டனர்; பெண் வழக்கறிஞர்கள் மீது அளவுக்கு மீறிய பலம் பயன்படுத்தப்பட்டதாக வழக்கறிஞர்கள் சங்கம் தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளது. செய்தி சேகரித்த செய்தியாளர்களும்விட்டுவைக்கப்படவில்லை.

மாலையிலும் ஓயாத கொந்தளிப்பு

இரவு ஏழு மணியளவில் விடுவிக்கப்பட்ட பினராயி விஜயன், “காவல் படைக்கே தகாத முறையில் தில்லி காவல்துறை நடந்துகொண்டது” என்று சாடினார். நேஹா போரா தனி அறையில் அடைக்கப்பட்டு, கைபேசி பறிக்கப்பட்டு, வழக்கறிஞர்களைச் சந்திக்கவும்அனுமதிக்கப்படவில்லை என்று அவரது அமைப்பு குற்றம்சாட்டியது. யமுனா விளையாட்டு வளாகத்தில் அடைக்கப்பட்ட வழக்கறிஞர்கள் தேசிய கீதம் பாடி எதிர்ப்பைத் தொடர்ந்தனர். நாற்பத்தைந்து மெட்ரோ நிலையங்கள் இரவு பத்து மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது.

“நாடு முழுவதையும் ஜந்தர் மந்தராக மாற்றுங்கள்” என்று காவலிலிருந்தே அறைகூவல் விடுத்தார் கெஜ்ரிவால். “எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள்” என்று சவால் விடுத்தார் ராகுல் காந்தி. தீப்கேவுக்குப் பின் தலைமை ஏற்ற அஜிங்க்யா ஷிண்டே, “காவல்துறை உங்களை எங்கு தடுக்கிறதோ, அதையே உங்கள் ஜந்தர் மந்தராக்குங்கள்” என்று அழைப்பு விடுத்தார். காவல்துறை மீது வழக்குப் பதிவு கோரிய வழக்கறிஞர் ரத்னா சிங்கின் மனுவை சாகேத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது; மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, நடிகர் இம்ரான் கான் உள்பட நானூறுக்கும் மேற்பட்டோர் கைதாகினர். சென்னையிலும் விஜயவாடாவிலும் இளைஞர்கள் வீதிக்கு வந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.