தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆர்ப்பரித்து எழுந்த இந்தியா!

10 Oct 2026, 10:46 pm
ஆர்ப்பரித்து எழுந்த இந்தியா!

ஆர்ப்பரித்து எழுந்த இந்தியா!

கோட்டையாக மாற்றப்பட்ட தில்லி : பல்லாயிரம் படையினர் குவிப்பு

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் அறிவிக்கப்பட்ட போராட்டத்தைத் தடுக்க, ஒன்றிய அரசு தலைநகர் தில்லியை முற்றிலுமாக முடக்கியது. தில்லி காவல்துறையினரும் மத்திய ஆயுதக் காவல் படையினரும் என 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டதாக ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ தெரிவித்துள்ளது. 26,000 முதல் 27,000 ஆயுதப் படையினர் நிறுத்தப்பட்டதாக ‘சவுத் பர்ஸ்ட்’, ‘கவுன்டர்கரன்ட்ஸ்’ தளங்களும் கூறுகின்றன.

அதே போல சாலைகள் தோறும் பல அடுக்கு இரும்புத் தடுப்புகள், ஆணிப் பட்டைகள், வாகனச் சோதனை, ட்ரோன் கண்காணிப்பு என மத்திய தில்லி போர்க்களம் போலக் காட்சியளித்தது. புதுதில்லி ரயில் நிலையத்தைச் சுற்றிலும் அதிவிரைவுப் படை நிறுத்தப்பட்டது. கொரோனா காலத்துக்குப் பிறகு தில்லி கண்ட மிகப்பெரிய முடக்கம் இதுவே என ‘சவுத் பர்ஸ்ட்’ வர்ணித்துள்ளது.

(ஆதாரம்: தி ஸ்டேட்ஸ்மேன், சவுத் ஃபர்ஸ்ட், கவுன்டர்கரன்ட்ஸ், ஏஎன்ஐ)

மெட்ரோ நிலையங்கள் மூடல்; ரயில்கள் ரத்து; இணையம் துண்டிப்பு

போராட்டக்காரர்கள் தில்லிக்குள் வருவதைத் தடுக்க மக்களின் அன்றாடப் போக்குவரத்தையே அரசு நிறுத்தியது. வெள்ளிக்கிழமை இரவு முதலே 57 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதாக ஏஎன்ஐ செய்தியை மேற்கோள் காட்டி ‘அல் ஜசீரா’ ஊடகம் தெரிவித்தது. சனிக்கிழமை பிற்பகலிலும் 46 நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாக ஏஎன்ஐ நிறுவனமும் கூறியது.

அதே சமயம் பல நெடுந்தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பிற்பகல் 2 மணி வரை 250க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்தானதாக ‘கவுன்டர்கரன்ட்ஸ்’ குறிப்பிடுகிறது. போராட்டப் பகுதியைச் சுற்றி 4 கிலோமீட்டர் சுற்றளவில் சனிக்கிழமை இரவு வரை கைபேசி இணைய சேவை துண்டிக்கப்பட்டது. ஒரு போராட்டத்தைத் தடுப்பதற்காக லட்சக்கணக்கான மக்களை அரசு அவதிக்குள்ளாக்குகிறது என்று போராட்ட அமைப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.

(ஆதாரம்: அல் ஜசீரா (ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ்), ஏஎன்ஐ, கவுன்டர்கரன்ட்ஸ்)

ஜந்தர் மந்தரில் போராட அனுமதி மறுப்பு: காவல்துறையின் மழுப்பல்

போராட்டங்களுக்கென்றே அரசால் ஒதுக்கப்பட்ட இடமான ஜந்தர் மந்தரில் கூடுவதற்கே தில்லி காவல்துறை அனுமதி மறுத்தது. அனுமதி கோரும் விண்ணப்பம் அக்டோபர் 7 அன்றுதான் அளிக்கப்பட்டது என்றும், 10 நாள் முன்னறிவிப்பு என்ற விதி பின்பற்றப்படவில்லை என்றும் காவல்துறை கூறியது. முந்தைய போராட்டங்களின்போது அளித்த உறுதிமொழிகளை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி) மீறியது என்றும் காரணம் காட்டப்பட்டது.

தடையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை முன்கூட்டியே எச்சரித்தது. நான்கு பேருக்கு மேல் கூடுவதைத் தடை செய்யும் பிரிவு பிஎன்எஸ் 163 (144 தடைக்கு இணையானது) உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஒரு போராட்டக் களத்தைப் பாதுகாப்பது என்ற அளவைத் தாண்டி, நகரம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது ஜனநாயக உரிமை குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

(ஆதாரம்: அல் ஜசீரா, கவுன்டர்கரன்ட்ஸ், தி ஸ்டேட்ஸ்மேன்)

இரவோடு இரவாக வேட்டை: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே கைது

போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, வெள்ளிக்கிழமை இரவே அடக்குமுறை தொடங்கிவிட்டது. தலைநகரில் இரவோடு இரவாகக் குறைந்தது ஆயிரம் பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டது. சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி நிலவரப்படி கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 250 பேர் தென்கிழக்கு தில்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்; குறிப்பாக, 2020இல் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் மையமாக விளங்கிய ஷாஹீன் பாக் பகுதியைச் சுற்றியுள்ளவர்கள் எனக் காவல்துறை வட்டாரம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதே சமயம் உத்தரப்பிரதேச எல்லையை ஒட்டிய ஷாதரா, கிழக்கு தில்லி மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர். வெள்ளிக்கிழமை இரவு முதலே முன்னெச்சரிக்கைச் சோதனைகள் நடப்பதாகத் தில்லி துணை ஆணையர் குமார் அபிஷேக் ஏஎன்ஐயிடம் உறுதிப்படுத்தினார்.

(ஆதாரம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (சவுத் ஃபர்ஸ்ட் மேற்கோள்), தி ஸ்டேட்ஸ்மேன், ஏஎன்ஐ)

தடுப்பு முகாம்களாகிய விளையாட்டு மைதானங்கள்

கைது செய்யப்படுவோரை அடைத்து வைப்பதற்காக தில்லியின் விளையாட்டு மைதானங்களே தற்காலிகத் தடுப்பு முகாம்களாக மாற்றப்பட்டன. புதுதில்லி மாவட்டம் 20 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித் தடுப்பு மையம் அமைக்கப்பட்டதாகக் காவல்துறையே அறிவித்தது. சத்ரசால் மைதானம், ராஜீவ் காந்தி மைதானம், யமுனா விளையாட்டு வளாகம், சூரஜ்மல் மைதானம், தௌலத்பூர், பந்த்ராவல் சமுதாயக் கூடங்கள் ஆகியவை கைது செய்யப்படுவோரை அடைப்பதற்கான திறந்தவெளி சிறைசாலைகளாக ஒதுக்கப்பட்டன.

கன்னாட் பிளேஸ், தௌலா குவான், ஜந்தர் மந்தர் சுற்றுப்புறம் எனப் பல இடங்களில் கைதுகள் நடந்தன. தனித்தனிக் குழுக்களாக வந்த சுமார் 500 பேரும், முன்னெச்சரிக்கையாக மேலும் 50 பேரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை முதலில் கூறியது. சனிக்கிழமை பிற்பகல் 2.50 மணி நிலவரப்படி அன்று மட்டும் சுமார் ஆயிரம் பேர் கைதானதாகக் காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ தெரிவித்தது.

(ஆதாரம்: ஏஎன்ஐ, தி ஸ்டேட்ஸ்மேன்)உச்சநீதிமன்ற

உத்தரவை மீறியதாக அவமதிப்பு மனு

போக்குவரத்தை முற்றிலுமாகத் தடை செய்யக் கூடாது என அக்டோபர் 9 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சில ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. ரயில், மெட்ரோ கட்டுப்பாடுகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முந்தைய நாளே உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி மெட்ரோ நிலையங்கள் தொடர்ந்து மூடப்படுவதாகவும், பொதுப் போக்குவரத்து முடக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ‘லைவ் லா’ செய்தி வெளியிட்டுள்ளது. மறுபுறம், நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளதாகவும், எவை தேவை என்பதைத் தில்லி காவல்துறை முடிவு செய்யும் என்றும் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வாதிட்டார்.

(ஆதாரம்: லைவ் லா (சவுத் ஃபர்ஸ்ட் மேற்கோள்), அல் ஜசீரா, தி ஸ்டேட்ஸ்மேன், ஏஎன்ஐ)

காவலர் சீருடையில் உடல் கேமராக்கள்

போராட்டப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தில்லி காவலர்கள் தங்கள் சீருடையில் உடல் கேமராக்களைப் பொருத்தியிருந்தனர். இருளிலும் இயங்கக்கூடிய இக்கேமராக்கள் அனைத்தையும் பதிவு செய்யும் என்று ஒரு காவலர் ஏஎன்ஐயிடம் கூறினார். போராட்டக்காரர்களைத் தாக்கியதாகக் காவல்துறை மீது குற்றச்சாட்டுகள் எழும்போது, உண்மையில் என்ன நடந்தது என்பதை இப்பதிவுகள் நிரூபிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதே நாளில் தலைவர்கள் தள்ளிவிடப்பட்டதாகவும், வழக்கறிஞர்கள் மீது அளவுக்கு மீறிய பலம் பயன்படுத்தப்பட்டதாகவும், மாணவர்களின் கைபேசிகள் பறிக்கப்பட்டதாகவும் அடுத்தடுத்துக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே இந்தக் கேமரா பதிவுகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற வாய்ப்புள்ளது.

ஆதாரம்: ஏஎன்ஐ

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரித் தலைவர்கள் கைது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தலைமையில் ஜந்தர் மந்தர் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்ட தலைவர்களைத் தில்லி காவல்துறை வழிமறித்துக் கைது செய்தது. கேரள இல்லத்திலிருந்து வெளியே வந்த உடனேயே எம்.ஏ.பேபி, எம்.வி.கோவிந்தன், பிருந்தா காரத், பி.கே.ஸ்ரீமதி, கே.கே.சைலஜா, பி.ராஜீவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இ.பி.ஜெயராஜன் உள்ளிட்ட தலைவர்களும் காவல்துறை பேருந்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.

பிருந்தா காரத் வடமேற்கு தில்லியின் சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தம்முடன் அடைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களிடையே அவர் உரையாற்றினார். இன்று அரசுதான் மக்களைக் கண்டு அஞ்சுகிறது என்று அவர் கூறினார். காங்கிரஸ் கட்சி இப்போராட்டத்தில் பங்கேற்காத நிலையில், இடதுசாரிக் கட்சிகளும் ஆம் ஆத்மி கட்சியும் நேரடியாகக் களமிறங்கின.

ஆதாரம்: தி நியூஸ் மினிட், தி ஸ்டேட்ஸ்மேன், சவுத் ஃபர்ஸ்ட், சிபிஐ(எம்) எக்ஸ் பக்கம்

“நான்கு பேருக்கு மேல் கூடாது”: பினராயி விஜயனைத் தடுத்த காவல்துறை

முதல் சுற்றுக் கைதுகளுக்குப் பிறகு, கேரள எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான பினராயி விஜயன், மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், முன்னாள் நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் எம்எல்ஏ ஆகிய மூவரும் ஜந்தர் மந்தர் நோக்கி நடைபயணமாக புறப்பட்டனர். நான்கு பேருக்கு மேல் கூடக் கூடாது என்ற உத்தரவை மூவர் மட்டுமே செல்வதால் மீறவில்லை என்று அவர்கள் வாதிட்டனர்.

எந்த வகையான பேரணிக்கும் அனுமதி இல்லை என்று காவல் அதிகாரி ஜான் பிரிட்டாஸிடம் கூறினார். “காவல் ராஜ்ஜியம் ஒழிக, பாசிசம் ஒழிக” என முழக்கமிட்டபடி மூவரும் தடுப்புகளை நோக்கிச் சென்றனர். சிறிது நேர வாக்குவாதத்துக்குப் பிறகு மூவரும் கைது செய்யப்பட்டனர்.

(ஆதாரம்: சவுத் ஃபர்ஸ்ட், தி நியூஸ் மினிட், கவுன்டர்கரன்ட்ஸ்)

“இது ஜனநாயகப் படுகொலை; போராட்டம் இன்றோடு முடியாது”: பினராயி விஜயன்

“இது ஜனநாயகப் படுகொலை” என்று கைதுக்குப் பின் செய்தியாளர்களிடம் பினராயி விஜயன் கூறினார். தங்கள் அரசைத் தேர்ந்தெடுக்கும் மக்களின் உரிமையையே பறிக்க முயற்சி நடக்கிறது என்றும், 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது என்றும், அரசுக்காகவே ஞானேஷ் குமார் இதைச் செய்தார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இது காவல் அரசா, ஜனநாயக நாடா என்று கேள்வி எழுப்பிய அவர், ஆளும் அரசுக்கு ஜனநாயகத்தின் மீது மரியாதை இல்லை என்றார்.

ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் குரலுக்கு அஞ்சும்போது ஜனநாயகமே தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று அவர் டுவிட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். தடுப்புகள் தெருக்களை மறிக்கலாம்; ஜனநாயகத்தின் அணிவகுப்பை அவை நிறுத்த முடியாது என்றும் மோடி அரசுக்கும் சங்பரிவாரத்துக்கும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ஆதாரம்: தி நியூஸ் மினிட், ஏஎன்ஐ, தி ஸ்டேட்ஸ்மேன்

சுர்ஜித் பவனிலிருந்து புறப்பட்ட தலைவர்கள் மின்டோ சாலையில் கைது

இந்திரஜித் குப்தா சாலையில் உள்ள ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களின் மற்றொரு அணி பேரணியாகப் புறப்பட்டது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பி.வி.ராகவலு, அருண் குமார், விஜூ கிருஷ்ணன், மரியம் தாவ்லே, மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆர்.சிந்து, லோகநாதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மின்டோ சாலை அருகே இவர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்தது.

திரிபுரா முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான மாணிக் சர்க்காரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை தெரிவிக்கிறது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான விஜூ கிருஷ்ணன், மாதர் சங்கத் தலைவர் மரியம் தாவ்லே, தொழிற்சங்கத் தலைவர் ஏ.ஆர்.சிந்து ஆகியோர் ஒரே அணியில் கைதானது குறிப்பிடத்தக்கது.

பொதுச் செயலாளரைக் கொடூரமாகத் தள்ளி இழுத்தனர்: சிபிஎம் குற்றச்சாட்டு

இந்திய மக்களின் வாக்குரிமைக்காகப் போராடிய குற்றத்துக்காக, கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபியையும் மூத்த தலைவர்களையும் அமித் ஷாவின் காவல்துறை கொடூரமாகத் தள்ளி இழுத்துச் சென்றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ‘தி வயர்’ இணைய ஊடகம் பதிவு செய்த காணொளியைத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கட்சி பகிர்ந்துள்ளது. இந்த அடக்குமுறை ஆட்சி ஒழிய வேண்டும் என்றும் அப்பதிவு கூறுகிறது.

“உங்கள் தடிகளும் காக்கிச் சட்டைகளும் ‘வாக்குத் திருடனே, நாற்காலியை விட்டு இறங்கு’ என்ற முழக்கத்தை மூழ்கடித்துவிட முடியாது” என்றும் கட்சி பதிவிட்டுள்ளது. தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அனைத்து தேசிய ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. தள்ளிவிடப்பட்டது குறித்த விவரம் கட்சியின் கூற்றாகவும், அது பகிர்ந்த காணொளியின் அடிப்படையிலும் இங்கு தரப்படுகிறது.

ஆதாரம்: சிபிஐ(எம்) எக்ஸ் பக்கம்; காணொளி: தி வயர் (கவுன்டர்கரன்ட்ஸ், தி வீக் மேற்கோள்)

ஏ.கே.ஜி. பவனிலிருந்து மாணவர், வாலிபர் பேரணி: 400க்கும் மேற்பட்டோர் கைது

கோல் மார்க்கெட் பகுதியில் உள்ள ஏ.கே.கோபாலன் பவனிலிருந்து ஜந்தர் மந்தர் நோக்கிப் பேரணி செல்ல இந்திய மாணவர் சங்கமும் (எஸ்எப்ஐ), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் (டிஒய்எப்ஐ) திட்டமிட்டிருந்தன. மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழு அலுவலகமும் இதே கட்டடத்தில் உள்ளது. மாணவர் சங்கத் தலைவர் ஆதர்ஷ் எம்.சாஜி, வாலிபர் சங்கத் தலைவர் ஏ.ஏ.ரஹீம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அருண் குமார், விஜூ கிருஷ்ணன் உள்ளிட்டோர் அங்கிருந்தனர்.

பேரணி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, காலை சுமார் 11 மணியளவில் காவல்துறை அவர்களைக் கைது செய்தது. 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக ஆதர்ஷ் எம்.சாஜி உறுதிப்படுத்தினார். “இது எதேச்சதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையிலான போர்; ஞானேஷ் குமார் நாற்காலியிலிருந்து தூக்கி எறியப்படுவார்” என்று காவல் பேருந்துக்குள்ளிருந்து ஒரு போராட்டக்காரர் முழங்கினார்.

ஆதாரம்: பிடிஐ (மெட்ரோ வார்த்தா, தி பேட்ரியாட்), நியூஸ்பைட்ஸ்

இம்தியாஸ் கான் மார்க்கில் தடுப்புகளைத் தள்ளி முன்னேறிய மாணவர்கள்

தில்லியின் இம்தியாஸ் கான் மார்க் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய பேரணியைக் காவல்துறை இரும்புத் தடுப்புகளால் மறித்தது. ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என முழக்கமிட்ட மாணவர்கள் தடுப்புகளைத் தள்ளிச் சாய்த்து முன்னேற முயன்றனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

“இங்கே நான்கு பேரைக் கைது செய்வதற்காக எவ்வளவு பெரிய படையைக் குவித்திருக்கிறார்கள் பாருங்கள். தில்லி முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வந்து சேர்வதைத் தடுத்துவிட்டார்கள். தில்லிக்குள்ளேயே எங்கள் உரிமைகள் மறுக்கப்படுகின்றன” என்று ஒரு போராட்டக்காரர் செய்தியாளர்களிடம் கூறினார். நகரின் நுழைவாயில்கள் அனைத்திலும் தீவிர வாகனச் சோதனையும் பரவலான கைதுகளும் நடந்தன.

ஆதாரம்: ஏஎன்ஐ, ஏசியாநெட் நியூஸபிள்

குடியரசுத் தலைவரிடம் இந்தியா கூட்டணி மனு: “ஆராய்வதாக உறுதியளித்தார்”

மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையிலான இந்தியா கூட்டணித் தலைவர்கள் குழு வெள்ளிக்கிழமை மாலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து, தேர்தல் நடைமுறை முறைகேடுகள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தது. மனு குடியரசுத் தலைவர் முன்னிலையில் வாசிக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு உறுப்பினரும் தமது கருத்தை எடுத்துரைத்ததாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா தெரிவித்தார்.இவ்விவகாரத்தை ஆராய்ந்து ஆதாரங்களைக் கண்டறிய முயல்வதாகக் குடியரசுத் தலைவர் கூறினார்; தங்களிடம் உள்ள சான்றுகளை அளிக்கத் தயார் என்று ராகுல் காந்தி பதிலளித்தார் என்றும் ராஜா கூறினார். குடியரசுத் தலைவர் பொறுமையாகக் கேட்டார் என்றும், போராட்டம் நாளை மறுநாளும் (அக். 11) தொடரும் என்றும் அக்கட்சியின் எம்.பி. பி.சந்தோஷ் குமார் தெரிவித்தார்.ஆதாரம்: ஏஎன்ஐ

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.