தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அக்டோபர் 10 போராட்டத்திற்குத் தடை தில்லி அரசின் ஒடுக்குமுறைக்கு இடதுசாரித் தலைவர்கள் கடும் கண்டனம்

9 Oct 2026, 10:48 pm
அக்டோபர் 10 போராட்டத்திற்குத் தடை  தில்லி அரசின் ஒடுக்குமுறைக்கு  இடதுசாரித் தலைவர்கள் கடும் கண்டனம்
<p><strong>அக்டோபர் 10 போராட்டத்திற்குத் தடை தில்லி அரசின் ஒடுக்குமுறைக்கு இடதுசாரித் தலைவர்கள் கடும் கண்டனம்</strong></p><p>புதுதில்லி, அக். 9 –இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து அக்டோபர் 10 (இன்று) நடைபெறவுள்ள பேரணியைத்தடுத்து நிறுத்த தில்லி காவல்துறை விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள்கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து இடதுசாரித் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், தில்லி காவல்துறையினர் மூலமாகப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும், தீவிரமான தடுப்புகளை அமைப்பதும், தடை உத்தரவுகளைப் பிறப்பிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. </p><p>தேசிய தலைநகர் பிராந்தியம் முழுவதும்57 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளதும், தில்லிக்கு வரும் ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளதும், பல்வேறு இடங்களில்வீட்டுக்காவல் மற்றும் பாதுகாப்புப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதும் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித்தாக்குதலாகும். மேலும், பல்வேறு இடங்களில்மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாகவும், மாணவர் அமைப்புகளின் அலுவலகங்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் வரும் தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அவதியையும் இடையூறுகளையும் ஏற்படுத்தி யுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே, தில்லி காவல்துறையும் ஒன்றிய அரசும் போராட்டக்காரர்களை அச்சுறுத்து வதையும், தடுத்து நிறுத்துவதையும் உடனடியாகக் கைவிட வேண்டும். எந்தவிதத் தடைகளும் இன்றி மக்களை ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் போராட அனுமதிக்க வேண்டும்என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்பொதுச்செயலாளர் டி. ராஜா, சிபிஐ(எம்எல்)-விடுதலை பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, ஆர்எஸ்பிபொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, மற்றும் பார்வார்டு பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன் ஆகியதலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.