அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை மீண்டும் அட்டூழியம் 3 பெண் பத்திரிகையாளர்களுக்குப் பாலியல் தொல்லை!
yesterday

அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை மீண்டும் அட்டூழியம் 3 பெண் பத்திரிகையாளர்களுக்குப் பாலியல் தொல்லை!

புதுதில்லிவெள்ளிக்கிழமை இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எப்.ஐ) தலைமையில் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கைக்கு எதிராக ஜந்தர் மந்தர்நோக்கிப் பேரணி நடைபெற்றது. இந் தப் பேரணியில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, மூத்த தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர்.

புகார்; ஆனால் எப்.ஐ.ஆர். இல்லை!

இந்தப் பேரணியைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தர் அருகே அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் சனிக்கிழமைபோராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திலும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். குறிப் பாக, செய்தி சேகரிக்கச் சென்ற 3 பெண் பத்திரிகையாளர்கள், ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப் பாட்டின் கீழ் உள்ள தில்லி காவல்துறையால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுதொடர்பாகப் பாலியல் தொல் லைக்கு ஆளான பெண் பத்திரிகையாளர் ரோஸி கூறுகையில், “அகில இந் திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேகா போரா கைது செய்யப்படுவதைப் பதிவு செய்துகொண்டிருந்தபோது, தில்லி உதவி காவல் ஆணையர் விவேக் பகத் என்னைத் தவறான முறையில் தொட்டார். நான் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் என்னை கீழே தள்ளிவிட்டார். இதுதொடர்பாகப் புகார் அளித்தும், இதுவரை எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை” என அவர் குற்றம் சாட்டினார். இதேபோல, மேலும் 2 பெண் பத்திரிகையாளர்களும் தில்லி காவல் துறையினரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாகவும், அடையாளஅட்டையைக் காண்பித்தும் செய்தி சேகரிக்க விடாமல் கைது செய்யும் நோக்கில் தவறாக நடத்தப்பட்டதாகவும்குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர் போராட்டம்

இத்தகைய சூழலில், பெண் பத்திரிகையாளர்கள் மீதான பாலியல் வன் முறையைக் கண்டித்து ஞாயிற்றுக் கிழமை நாடாளுமன்ற வீதிக் காவல் நிலையம் முன்பு பத்திரிகையாளர்கள்,இடதுசாரிகள் மற்றும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (சி.ஜே.பி.) சார்பில் தில்லி காவல்துறையின் தவறான நடத்தையைக் கண்டித்துப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங் கேற்ற சி.ஜே.பி. உறுப்பினர் ரத்னா சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“தில்லி காவல்துறை மீது மொத்தம் 3 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்கள் அளித்துள்ளனர். ஆனால்,இந்த வழக்கைத் தில்லி காவல்துறை விசாரிக்காமல் குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளது. எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாமல் ஏன் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட் டது என்பது தொடர்பாக இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை. குற்றப் பிரிவு விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பு குற்றம்சாட்டப்பட்ட தில்லி உதவி காவல் ஆணையர் விவேக் பகத் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியப் பத்திரிகை ஆணையம் கண்டனம்

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்களைத் தில்லி காவல்துறை நடத்தும் விதம் பேரதிர்ச்சியும் வேதனை

யும் அளிப்பதாக இந்தியப் பத்திரிகை ஆணையம் (Press Council of India)

கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “ஜனநாயகத்தில் காவல்துறையினரே பெண் பத்திரிகையாளர்களுக்குப் பாலியல் தொல்லை அளிக்கும் நடத்தையை இயல்பானதாக ஏற்றுக்கொள்ள முடியாது. பத்திரிகையாளர்கள் எத்தகைய அச்சமுமின்றி சுதந்திரமாகப் பணியாற்றவும், பல்வேறு பிரச்சனைகளை எழுப்பக் கூடுபவர்களைப் பதிவு செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும்.

நாட்டின் தலைநகரின் மையப்பகுதியில் கூட இது அனுமதிக்கப்படவில்லை என்பது இந்தியாவில் ஊடகச் சுதந்திரத்தின் போக்கிற்கு நல்லதல்ல” என இந்தியப் பத்திரிகைக் ஆணையம் எச்சரித்துள்ளது.

தில்லி காவல்துறை பத்திரிகையாளர்கள் மற்றும் பெண் போராட்டக்காரர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவது இது முதல்முறையல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம் தில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போதும் பெண்கள் (பத்திரிகையாளர் உட்பட) தில்லி காவல் துறையால் பாலியல் தொல்லைக்கு உள் ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிருந்தா காரத் கடும் கண்டனம்!

பெண் பத்திரிகையாளருக்குப் பாலியல் தொல்லை அளித்தது மற்றும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யாத தில்லி காவல்துறையின் அடாவடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் பேசுகையில், “பாலியல் புகார் குறித்துச் சட்டப்படி எந்தவொரு பெண்ணும் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தால், உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட வேண்டியது மிக அவசியம். ஆனால், தில்லி நாடாளுமன்ற வீதிக் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆணையர் (ஏசிபி) விவேக் பகத், செய்தி சேகரிக்க வந்த பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்டதாகப் புகார் அளித்தும் காவல்துறை எப்.ஐ.ஆர். பதிவு செய்ய மறுக்கிறது. பெண் பத்திரிகையாளர் கேள்வி கேட்டதும் சீருடை அணிந்த ஏசிபி அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். சட்டப்படி பாலியல் தொல்லைப் புகாரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டிய காவல்துறையினர், இங்குப் பல மணி நேரமாகக் காத்திருந்தும் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய மறுக்கிறார்கள். மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு அதிகாரி யார் என்பதைக் கூடக் கூற மறுக்கிறார்கள்.

பெண்களுக்குச் சாதகமாகச் சட்டங்களை மாற்றுவதற்கும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கும் பல தசாப்தங்களாக நாங்கள் (சிபிஎம், மாதர் சங்க அமைப்பினர்) நடத்தி வந்த போராட்டங்களை, அமித் ஷாவின் கீழ் இயங்கும் தில்லி காவல்துறை வீணடித்து வருகிறது. இதனை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது; நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என பிருந்தா காரத் ஆவேசமாகக் கூறினார்.