தீக்கதிர் முக்கிய செய்திகள்
2 Nov 2026, 9:41 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தி ஜாமியா ஊடகம்

தில்லி ஷாக்தரா காவல் நிலையத்தில் காவலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 2 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து சுமார் 100 காவலர்கள் திங்களன்று தில்லி காவல்துறைதலைமையகத்தின் வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய வரலாற்றில் காவல்துறையைஎதிர்த்து, காவல்துறையினரே போராடுவது மோடி ஆட்சியில் மட்டுமே நிகழ்ந்து வருகிறது.

வடகிழக்கு ஜர்னலிஸ்ட் யூனியன்

தில்லி ராம்லீலாவில் நடைபெற்ற போராட்டம் தொடர்பான புகைப்படம் மட்டுமின்றி பல்வேறு புகைப்படங்கள் ஞாயிறன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ஆனால் வைரலாகிய புகைப்படங்கள் எதுவும் போலியானது அல்ல. 2014 முதல் பாஜகவை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்புகள் என்பதை மோடி அரசாங்கம் உணர வேண்டும்.

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் ஐடி விங்

ஹைதராபாத்தில் திங்களன்று மாலை அமித் ஷா தலைமையில் பாஜகவினர் ‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் பேரணி மேற்கொண்டனர். ஆனால் யாரும் ஜனநாயகம் என்ற வார்த்தையை முழக்கமாக எழுப்பவில்லை. அதனால் அது பேரணி அல்ல, மாலை நேர நடைபயணமாக இருக்கலாம்.

ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பார்தி

தில்லி காவல்துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே இதுபோன்ற பிளவை உருவாக்குவது யார்? நாடு முழுவதும் அரசுகளைக் கவிழ்ப்பதில் அமித் ஷா வல்லவராக இருக்கலாம். ஆனால் அவரால் சொந்தத் துறையிலேயே அமைதியை ஏற்படுத்த முடியவில்லையே!