தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண் நிருபர்களுக்குப் பாலியல் தொல்லை : காவல் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப் பத்திரிகையாளர் அமைப்புகள் கடிதம்!

7 Oct 2026, 11:15 pm
பெண் நிருபர்களுக்குப் பாலியல் தொல்லை : காவல் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப் பத்திரிகையாளர் அமைப்புகள் கடிதம்!

பெண் நிருபர்களுக்குப் பாலியல் தொல்லை : காவல் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப் பத்திரிகையாளர் அமைப்புகள் கடிதம்!

புதுதில்லிஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டங்கள் பற்றி செய்தி சேகரிக்கும் பெண் நிருபர்களுக்குப் பாலியல் தொல்லை தந்த காவல் அதிகாரி மீது குற்றவழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, பத்திரிகையாளர் அமைப்புகள் தில்லி காவல்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளன.உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை ஜந்தர் மந்தரில் பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி வருகிறது. மேலும், காவல் உதவி ஆணையர் ஒருவர் பெண்பத்திரிகையாளர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்வதற்கு மாறாகப் பதவி உயர்வு கொடுத்துள்ளது பாஜக அரசு.இந்நிலையில், அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,இந்தியப் பெண் பத்திரிகையாளர்கள் அமைப்பு உட்படப் பல ஊடக அமைப்புகள் தில்லி காவல்துறை ஆணையர்அனுராக் குமாருக்குக் கடிதம் எழுதியுள்ளன.

பத்திரிகையாளர் அமைப்புகளின் கடிதம்

இந்தியப் பெண் பத்திரிகையாளர்கள் அமைப்பின் தலைவர் சுஜாதா ராகவன் தலைமையில், பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, தில்லி பத்திரிகையாளர்கள் சங்கம், பிரஸ் அசோசியேஷன் மற்றும் கேரளா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தில்லி கிளைஆகிய அமைப்புகள் இணைந்து இந்தக் கூட்டறிக்கையையும் கோரிக்கை மனுவையும் அனுப்பியுள்ளன.அவர்களின் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:எவ்வளவு கடினமான சூழலாக இருந்தாலும் களத்தில் நின்று செய்தி சேகரிப்பதே பத்திரிகையாளர்களின் கடமையாகும். ஆனால், ஜந்தர்மந்தரில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களிடம் தில்லி காவல்துறை மிகக் கொடூரமாகவும், கடுமையான அடக்குமுறையுடனும் நடந்து கொள்கிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் எக்ஸ் (X) போன்ற தளங்களில் செய்திகளை வழங்கும் சுயாதீனப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாகப் பல பெண் பத்திரிகையாளர்கள் இதில் இயங்கி வருகின்றனர். அவர்களிடம் அரசு அங்கீகாரம் இல்லை என்ற காரணத்தைக் கூறி, காவல்துறை நியாயமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதையும், செய்தி சேகரிக்கும் உரிமையைப் பறிப்பதையும் கைவிட வேண்டும்.கடந்த அக்டோபர் 3 அன்று போராட்டம் நடைபெற்ற இடத்தில் செய்தி சேகரிக்க வந்த மூன்று பெண் பத்திரிகையாளர்களுக்குப் பாலியல் தொல்லைஅளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், காவல் உதவி ஆணையர் விவேக் பகத்மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படவில்லை. இது சட்டத்தை வெளிப்படையாக மீறும் செயலாகும். புகாரைப் பெற்றவுடன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதே சட்ட நடைமுறையாகும்.

இந்த விவகாரத்தை வெறுமனே குற்றப்பிரிவுக்கு மாற்றுவது காவல்துறையின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரி மீதுஉடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து, போராட்டக் களத்தில் பெண்பத்திரிகையாளர்கள் உட்பட பெண்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க நடுநிலையான நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, களத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்களிடம் தில்லி காவல்துறை மிகுந்தநிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனப் பத்திரிகையாளர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.