தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பல்கலைக்கழகக் கல்லூரிகளில் ஆர்எஸ்எஸ் நிகழ்வுகள் எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மீது தில்லி காவல்துறை தடியடி

29 Mar 2026, 3:34 pm
பல்கலைக்கழகக் கல்லூரிகளில் ஆர்எஸ்எஸ் நிகழ்வுகள் எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மீது  தில்லி காவல்துறை தடியடி
<p><strong>பல்கலைக்கழகக் கல்லூரிகளில் ஆர்எஸ்எஸ் நிகழ்வுகள் எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மீது &nbsp;தில்லி காவல்துறை தடியடி</strong></p> <p>புதுதில்லி தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங் &nbsp;கத்தின் (ஆர்எஸ்எஸ்) பெயரில் &nbsp;நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங் &nbsp;கப்பட்டதற்கு, மாணவர்கள் மற்றும் &nbsp;ஆசிரியர் அமைப்புகள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளன. தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கல் &nbsp;லூரிகளில் &lsquo;யுவ கும்பம்&rsquo; என்ற பெய ரில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100 ஆண்டுகாலப் பய ணம் குறித்துப் பேச அவ்வமைப் &nbsp;பின் நிர்வாகிகள் அழைக்கப்பட்டி ருந்தனர். வெள்ளிக்கிழமை அன்று &nbsp;ஜாகிர் உசேன் தில்லி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்தி ரேஷ் குமார் மற்றும் கல்லூரி முதல் &nbsp;வர் நரேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்எஸ்எஸ் நிகழ்வு களுக்கு எதிராக இந்திய மாணவர் &nbsp;சங்கத்தின் (எஸ்எப்ஐ) தலைமை யில் மாணவர்கள் ஜாகிர் உசேன் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தி னர். அப்போது தில்லி காவல்துறை யினர் போராட்டம் நடத்திய மாண வர்களை வலுக்கட்டாயமாக அப்பு றப்படுத்தித் தடியடி நடத்தினர். இந்தத் தாக்குதலில் எஸ்எப்ஐ தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு நாடு முழு வதும் கண்டனங்கள் குவிந்து வரு கின்றன. பல்கலைக்கழகக் கல்விக்குழு கண்டனம் கழிப்பறை போன்ற அடிப் &nbsp;படை வசதிகளை மேம்படுத்த நிதி &nbsp;இல்லை என்று கூறும் கல்லூரி நிர்வாகம், இத்தகைய ஆர்எஸ்எஸ் பரப்புரை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் &nbsp;இடமும் வசதிகளும் தாராளமாக &nbsp;வழங்குவது ஒருதலைப்பட்சமா னது என இடதுசாரி மாணவ அமைப்புகள் குற்றம் சாட்டி யுள்ளன. அதேபோல் தில்லி பல்க லைக்கழகக் கல்விக்குழு உறுப்பி னர்கள், &ldquo;பொது நிதியில் இயங்கும் &nbsp;கல்வி நிலையங்களில் இத்தகைய ஆர்எஸ்எஸ் ஊடுருவல் ஆபத்தா னது. இது கல்வி நிலையங்களின் மதச்சார்பற்ற தன்மையைப் பாதிக்கும்&rdquo; எனக் கண்டனம் தெரி வித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.