தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லியில் போலீஸ் தடியடி தாக்குதல்: இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம்!

20 Jul 2026, 8:41 pm
தில்லியில் போலீஸ் தடியடி தாக்குதல்: இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம்!

தில்லியில் போலீஸ் தடியடி தாக்குதல்: இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம்!

தர்மேந்திர பிரதானை பதவிநீக்க வலியுறுத்தல்!

சென்னை, ஜூலை 20 - இடதுசாரி கட்சி களின் மாநில ஒருங்கி ணைப்புக்குழு கூட்டம், திங்கட்கிழமை (20.7.2026) சென்னை, அம்பத்தூரில் உள்ள சிபிஐ(எம்.எல்) லிப ரேசன் அலுவலகமான தோழர் கூடத்தில் நடை பெற்றது.

ஒருங்கிணைப்பாளர்கள் சிபிஐ(எம்) மாநிலச் செய லாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத் தம்பி மற்றும் ஒருங்கி ணைப்பு குழு உறுப்பி னர்கள் பி. சம்பத், என்.குணசேகரன், நா. பெரிய சாமி, எம். ரவி, எஸ். பால சுந்தரம், அ. சந்திரமோகன், எஸ்.ஜானகிராமன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில், தில்லியில் நாடா ளுமன்றம் நோக்கி மாண வர்கள், இளைஞர்கள் நடத்திய பேரணி மீது தடியடி தாக்குதல் நடத்திய மோடி அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை வன்மை யாகக் கண்டித்தும், நீட் தேர்வு குளறுபடிகள், கல்வித்துறை சீர்கேடுகளுக்கு காரணமான அமைச்சர் தர்மேந்திர பிர தானை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டு மென இடதுசாரிக் கட்சி களின் சார்பில் வலியுறுத்தி யும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

நடப்புத் தொடரிலேயே மகளிர் இடஒதுக்கீடு

“நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே, நாடாளுமன்றம், சட்ட மன்றங்களில் பெண் களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தேவையான நடவடிக்கை களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்; அயோத்தி ராமர் கோவிலில் உண்டியல் வருவாயில் நடைபெற்றுள்ள மிகப்பெரும் திருட்டில், கோவில் நிர்வாகிகள் உட்பட பலர் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் உறுதியாகவும், நேர்மையாகவும் விசார ணை நடைபெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டுமென்றும், சம்பந்த ப்பட்ட குற்றவாளிகள் அனை வரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டு மென்றும்” தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டங்கள் அளவில் ஒருங்கிணைப்புக்குழு

இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டுப் பிரகடனம் ஆகஸ்ட் 4 அன்று வெளி யிடப்படும் என்றும், தமிழ கத்திற்கான சமூக, பொரு ளாதார, பண்பாட்டு பிரச்ச னைகளுக்கான மாற்று அரசியல் திட்டமாக இந்த பிரகடனம் அமையும் என்ற நிலையில், ஆகஸ்ட் 10-க்குள் மாவட்டங்கள் அளவில் இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக்க ளை அமைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பரில் மாபெரும் பேரணி

அதைத் தொடர்ந்து, தமிழக மக்களின் வாழ்வா தாரப் பிரச்சனைகளை முன்வைத்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில் தமிழ கம் தழுவிய அளவில் செப்ட ம்பரில் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியை நடத்துவது என்றும் இடதுசாரிக் கட்சி களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.