நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி தில்லி காவல்துறை அராஜகம்
16 Oct 2026, 8:18 pm

நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி தில்லி காவல்துறை அராஜகம்

தலைநகர் தில்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள கன்னாட் பிளேஸ் சென்ட்ரல் பூங்காவில், தேசியக் கொடியை ஏந்தி அமைதியான முறையில் பேரணியாகச் செல்ல முயன்ற காக்ரோச் ஜனதா கட்சியினர் (சிஜேபி)மற்றும் இடதுசாரி மாணவர், வாலிபர் அமைப்பினர் மீது தொடுக்கப்பட்டுள்ள ஒடுக்குமுறைகள், இந்திய ஜனநாயக வரலாற்றில் கறுப்புப்பக்கங்களாகமாறிவருகின்றன. வாக்குத் திருட்டை அரங்கேற்றிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவிவிலக கோரி வெள்ளியன்று மாலை ஜந்தர் மந்தரில் தேசியக் கொடியைக் ஏந்தியதற்காக சிஜேபி தலைவர்கள் அசுதோஷ்ரங்கா மற்றும் சௌரவ் தாஸ், மாணவர் சங்கத் தலைவர்கள் ஐஷி கோஷ், நேஹா போரா உள்ளிட்ட ஏராளமானோர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு ஜனநாயக நாட்டில் தேசியக் கொடியை

ஏந்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது குடிமக்களின் அடிப்படை உரிமை. ஆனால், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்தில்லி காவல்துறை,உச்சநீதிமன்றஉயர்நீதிமன்ற அறிவுறுத்தல்களை மீறி சுமார் 32,000 பாதுகாப்புப் பணியாளர்களைக் குவித்தும், மெட்ரோ நிலையங்களை மூடியும், ரயில் சேவைகளைத் தடுத்தும் மத்திய தில்லியைக் ஒரு ராணுவமுகாம் போல மாற்றியுள்ளது. இளைஞர்களையும் மாணவர்களையும் கைது செய்ய வரிசையாக‘தடுப்புக் காவல் பேருந்துகள்’ நிறுத்தப்பட்டுள்ள விதம், இந்த அரசு பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைஎந்தளவுக்கு முடக்குகிறது.என்பதைக் காட்டுகிறது.

தேசபக்தி குறித்தும் தேசியக் கொடி குறித்தும்எப்போதும் முழக்கமிடும் ஆளுங்கட்சியானது, எதிர்க்கட்சிகளும், இளைஞர்களும் அதே தேசியக் கொடியை ஏந்தி அரசை எதிர்த்து கேள்வி கேட்கும்போது ஏன் இவ்வளவு அஞ்சுகிறது? மாற்றுச்சிந்தனையாளர்கள் மற்றும் மாணவர் தலைவர்களை உளவுத்துறையைக் கொண்டு கண்காணிப்பதும், ஒரு அடிகூட முன்னேற விடாமல் தடுப்புக்காவலில் வைப்பதும் எத்தகைய “ஜனநாயகம்”?

நிர்வாகக் காரணங்களைக் கூறி சென்ட்ரல் பூங்காவை பொதுமக்களுக்கு மூடுவது, காவல்துறை மூலம் அனுமதி மறுப்பது, பேரணியை முளையிலேயே கிள்ளியெறிய நினைப்பது போன்ற நடவடிக்கைகள், நாட்டின் கூட்டாட்சித்தத்துவத்தையும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமையையும் காலில் போட்டு மிதிக்கும் செயலாகும். இது வெறும் ஒரு கட்சி சார்ந்த போராட்டம் அல்ல; மாறாக, உழைக்கும் மக்களின், இளைஞர்களின் ஜனநாயகம் மற்றும் கருத்துரிமைக்கான மாபெரும் உரிமைப்போராட்டம்.

தில்லி காவல்துறையின் இந்த அடக்குமுறைகள் போராடும் மக்களின் நெஞ்சுறுதியை ஒருபோதும் குலைக்க முடியாது. ஒடுக்குமுறைகளால் மக்களின் எழுச்சியை ஒருபோதும் ஒடுக்க முடியாதுஎன்பதை இந்த அரசு விரைவில் உணரும்!