முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

2 Jul 2026, 9:33 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே

ஜந்தர் மந்தரில் நூலகம் அமைத்ததற்காக இரண்டு இளம் சிறுவர்களை தில்லி காவல்துறை கொடூரமாகத் தாக்கியுள்ளது. போராட்டக் களத்திற்கு வருபவர்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று மட்டும்தான் இந்தச் சிறுவர்கள் விரும்பினார்கள். காவல்துறை ஏன் அவர்களைத் தாக்கியது?

ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர்

ஒருவேளை மோடி ஈரானின் பிரதமராக இருந்திருந்தால், அங்கு போரே ஏற்பட்டிருக்காது. ஏனெனில், தனது நாட்டின் குடிமக்கள் கொல்லப்பட்டபோது கூட அவர் அமைதியாக இருந்திருப்பார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் தனது வெற்றியைப் பிரகடனப்படுத்தியிருப்பார்.

சுவீடன் பாடகி சாரா லார்சன்

சுவீடனின் மால்மோ நகரில் நடைபெறும் யூரோவிஷன் இசை நிகழ்ச்சியில் பாடுவதற்கு எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், இஸ்ரேல் யூரோ விஷனில் ஒரு அங்கமாக இருக்கும் வேளையில், அங்கு பாடுவது சரியாக இருக்காது என்று தோன்றிய தால் நான் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன். எனக்கு பணம் முக்கியமல்ல, மனிதாபிமானம்.

திரிணாமுல் எம்.பி., சகாரிகா கோஷ்

மோடி அரசு மக்களின் குரலுக்குச் செவிசாய்ப்பதை நிறுத்திவிட்டது. லடாக் விவகாரம், நீட் தேர்வு முறைகேடு விவகாரங்கள் தொடர்பாகப் பொதுமக்களின் கோபம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் 4ஆவது நாளை கடந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் மோடி அரசு பதற்றத்தில் உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram