தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டெல்லி போலீஸ் கைதும்; இந்து முன்னணியின் விஷமத்தனமும்!

21 Feb 2026, 4:39 pm
டெல்லி போலீஸ் கைதும்; இந்து முன்னணியின் விஷமத்தனமும்!
<p><strong>டெல்லி போலீஸ் கைதும்; இந்து முன்னணியின் விஷமத்தனமும்!</strong></p> <p>திருப்பூர், பிப்.21 - பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்து &nbsp;சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்ததாக திருப்பூர் மாவட்டத்தில் வெவ் வேறு இடங்களில் தங்கியிருந்த ஆறு பேரை &nbsp;டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினர் &nbsp;பிடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து இந்து முன்னணி அமைப்பு அரசியல் உள் நோக்கத்துடன் விஷமத்தனமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், திருமு ருகன் பூண்டி மற்றும் ஊத்துக்குளி ஆகிய பகு திகளில் தங்கியிருந்த ஆறு நபர்களை டெல்லி &nbsp;காவல் துறையின் சிறப்பு பிரிவினர் வெள்ளி யன்று இரவு பிடித்து விசாரணை மேற்கொண் டனர். சனியன்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வைத்திருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டெல்லிக்கு அழைத்துச் சென்ற னர். கைது செய்யப்பட்ட அனைவரும் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். டெல்லி யில் கடந்த 8ஆம் தேதி காஷ்மீர் பிரச்சனை &nbsp;குறித்து சர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டப்பட் டுள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல் துறையினர் சிலரை கைது செய்துள்ளனர். அவர்களது செல்போன்களை ஆய்வு செய்த போது, திருப்பூர் மாவட்டத்தில் இருந்த மேற்படி ஆறு பேரும் தொடர்பில் இருந்தது &nbsp;கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து இந்து முன்னணி ஓர் &nbsp;அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் டெல்லி &nbsp;குண்டுவெடிப்பு சம்பவ குற்றவாளிகளுடன் &nbsp;தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டி ருப்பதாக, கூறியிருக்கின்றனர். திருப்பூர் மாந கர காவல் துறையினர் இதை மறுத்துள் ளனர். எனவே உண்மைக்குப் புறம்பாக சொல்லி இருப்பது மட்டுமின்றி, இதை அர சியல் உள்நோக்கத்துடன் முடிச்சுப் போட்டுள் ளது இந்து முன்னணி. குறிப்பாக பயங்கர வாத செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவான குரல் ஆளும் திமுக கூட்டணி யால் எழுவதாக விஷமத்தனமாக குறிப் பிட்டுள்ளனர். அது மட்டுமின்றி வங்கதேச &nbsp;ஊடுருவல்காரர்கள் தமிழகத்தில் தலைம றைவாக அதிகளவில் வாழ்வதாகவும், இதற்கு ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் உடந் தையாக இருப்பதாகவும் வடிகட்டியப் பச்சைப் பொய்யை கூறியிருக்கின்றனர். ஆனால் வங்கதேசத்தினர் இங்கு ஊடு வுவது, வங்கதேசத்தில் இருந்து தமிழகத் துக்கு நேராக ஆகாயத்தில் பறந்து வரு வதில்லை. நிலப்பரப்பின் வழியாகத்தான் வருகின்றனர். எல்லை பாதுகாப்புப் படை &nbsp;உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முகமைகள் &nbsp;உள்ளன. இவற்றை கடந்துதான் இது &nbsp;போன்ற வெளிநாட்டினர் உள்ளே வருகின்ற னர். ஊடுருவல்காரர்கள் நுழைவதற்கு &nbsp;பாஜக அரசின் உள்துறை அமைச்சகம் தான் &nbsp;பதில் சொல்ல வேண்டும். அதைப் பற்றி இந்து முன்னணி கேள்வி எழுப்பவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் வங்கதேசத்தினர் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் கேட்டபோது, மாநகர காவல் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இது வரை 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்குத் தாக் கல் செய்து தண்டனையும் பெற்றுத் தந்திருக் கிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்புகூட 28 &nbsp;பேரை வங்க தேசத்திற்கு மூன்று மாதத் திற்குள் அனுப்பி வைக்க வேண்டும் என &nbsp;உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எங்க ளது உளவு அமைப்புகளின் மூலமும் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். மேலும், இந்தியாவின் இதர மாநிலங் களில் இருந்து புலம் பெயர்ந்து வரும் தொழி லாளர்கள் குறித்து தொழிற்சாலைகள் மூலம் &nbsp;இணையதளங்களில் அனைத்து விபரங்க ளையும் பதிவேற்றம் செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை &nbsp;வெளிமாநில தொழிலாளர்கள் 2.50 லட்சம் &nbsp;பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அந்நிய ஊடுருவல்காரர்களை எல்லையில் கண்கா ணித்து தடுக்க வேண்டும். மாநகர காவல் &nbsp;துறை அனைத்து விதத்திலும் இதில் உரிய நட வடிக்கை மேற்கொண்டு வருகிறோம், என்று &nbsp;கூறினார். தமிழக காவல் துறை ஊடுருவல்காரர்கள் விசயத்தில் எந்த அரசியல் நிர்பந்தமும் இல் லாமல் செயல்பட்டு வருகிறது. தொழில் நக ரத்தில் பாதுகாப்பற்ற சூழல் உருவாவது மாநி லத்தின் நிம்மதியையும், வளர்ச்சியையும் பெரிதும் பாதித்துவிடும் என்று இந்து முன்னணி நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ஆனால் ஒன்றிய அரசின் கொள்கைகள் கார ணமாகத்தான் இங்குள்ள தொழில் வளர்ச்சி &nbsp;பாதித்து, மக்கள் நிம்மதியாக இருக்க முடி யாமல் உள்ளனர். &nbsp;எனவே உண்மையான பிரச்சனையை திசை திருப்பி, மக்களிடம் விஷமத்தனமான அறிக்கை விடுவது எடுபடாது. மேலும் வாக்கு வங்கி அரசியல் செய்வதாக இந்து &nbsp;முன்னணி கூறியிருக்கிறது. ஆனால் பயங்க ரவாதிகளுக்கு எதிராக என்று சொல்லிக் கொண்டு இங்கிருக்கும் நல்லிணக்கமான சூழ்நிலையை சீர்குலைத்து இந்து வாக்கு &nbsp;வங்கியை உருவாக்க வேண்டும் என்று அரசி யல் செய்வது இந்து முன்னணியும், ஆர்எஸ் எஸ், பாஜக உள்ளிட்ட அமைப்புகளும் தான்! &nbsp;பொய்யை ஆதாரமாகக் கொண்ட இத்த கைய இழிவான முயற்சி திருப்பூர் மக்களிடம் &nbsp;எடுபடாது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.