தில்லியில் ஓய்வூதியதாரர்கள் மாபெரும் தர்ணா 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம்
32 minutes before

தில்லியில் ஓய்வூதியதாரர்கள் மாபெரும் தர்ணா 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம்

புதுதில்லி, நவ. 25 -சிவில் ஓய்வூதியதாரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (எப்.சி.பி.ஏ) மற்றும் ஓய்வூதியதாரர்கள் சங்கங்களின் தேசியஒருங்கிணைப்புக் குழு (என்சிசிபிஏ) சார்பில் புதுதில்லியில் உள்ள ஈஸ்டர்ன் கோர்ட் வளாகத்தில் புதன்கிழமை (நவ. 25) மாபெரும் தர்ணா நடைபெற்றது.

ஒன்றிய அரசு, ரயில்வே, பாதுகாப்புத் துறை, அஞ்சல் துறை, பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஓய்வூதிய தாரர்களும் குடும்ப ஓய்வூதிய தாரர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்து இந்நாள்தோறும் நடைபெற்ற தர்ணாவில் பங்கேற்றனர். முதுமை, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் மற்றும்தில்லியின் கடும் காற்று மாசுபாட்டையும் பொருட்படுத்தாமல் காலை 9.30 மணிக்கு முன்பாகவே ஏராளமா னோர் போராட்டக் களத்தில் திரண்டனர்.

சுதீப் தத்தா துவக்கி வைத்தார்

தர்ணாவை சிஐடியு அகில இந்தியத் தலைவர் சுதீப் தத்தா தொடங்கி வைத்தார். ஓய்வூதிய விதிகள் சரிபார்ப்புச் சட்டம் - 2025 மூலம் ஓய்வூதியதாரர்களின் நியாயமான உரிமைகளைப் பறிக்க மோடி அரசு திட்டமிட்டுமுயற்சிப்பதாக அவர் கடுமையாக விமர்சித்தார்.

கடினமாகப் போராடிப் பெற்ற 29 தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக 4 தொழிலாளர் நெறிமுறைகளைக் கொண்டு வந்து தொழிலாளர்களையும் இதேபோன்று நடத்துவதாகக் குறிப்பிட்டஅவர், இந்திய தொழில் வர்த்தசம்மேளன மாநாட்டில் (பிக்கி) பிரதமர் முதலைக் கண்ணீர் வடிப்ப தாகக் குற்றம் சாட்டினார். ஓய்வூதி யதாரர்களும் தொழிலாளர்களும் ஒரேமேடையில் இணைந்து போராட்டத்தைத் தொடர வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், போராட்டத்திற்கு முழு ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார்.

தொடக்கவுரையாற்றிய எஃப்.சி.பி.ஏ ஒருங்கிணைப்பாளரும் என்.சி.சி.பி.ஏ செயல் பொதுச் செய

லாளருமான கே.ஜி. ஜெயராஜ், ஓய்வூதியதாரர்கள் தில்லிக்கு வர நேர்ந்த சூழ்நிலைகளை விளக்கினார். பிரதமர்மற்றும் நிதியமைச்சரிடம் அளித்த மனுக்களுக்குப் பலன் இல்லாததும், ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு நாள் மற்றும் செப்டம்பர் 17 முதல் 19 வரைமாநிலத் தலைநகரங்களில் நடைபெற்ற மூன்று நாள் தர்ணா ஆகியவற்றுக்கு ஒன்றிய அரசிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காததும் இப்போராட்டத்திற்குக் காரணம் என அவர்தெரிவித்தார்.

சிவகோபால் மிஸ்ரா

என்.சி.சி.பி.ஏ தலைவர் சிவகோபால் மிஸ்ரா தலைமையுரை யாற்றினார். டி.எஸ். நகரா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச்செயலிழக்கச் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஓய்வூதிய விதிகள் சரிபார்ப்புச் சட்டம் - 2025-ஐ அவர்கடுமையாகக் கண்டித்தார். மேலும், 8-வது ஊதியக் குழுவின் ஆய்வு வரம்புகளில் 2026-க்கு முந்தையஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய மாற்றியமைப்பு சேர்க்கப்படாததையும் அவர் சுட்டிக்காட்டினார். சரிபார்ப்புச்சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட அவர், வழக்கை அவசரமாக விசாரித்து அச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். “நீதி தாமத மாகக் கிடைப்பது நீதி மறுக்கப் படுவதற்குச் சமம்,” என்றும் அவர் கூறினார்.ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ். வெங்கடேசன் சிறப்புரையாற்றுகையில், பெருநிறு வனங்களுக்கு அடுத்தடுத்துச் சலுகைகளை வாரி வழங்கிக் கொண்டு ஊழியர்கள் மற்றும்ஓய்வூதியதாரர்களின் உரிமை களை மறுக்கும் ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தினார்.ஓய்வூதிய சம்மேளன தேசிய நிர்வாகிகள் டி.பாலசுப்பிரமணியன், ஆர். முரளீதரன் நாயர், டி.கே. தேப்நாத், ஸ்ரீதர் சாகரம், எஸ்.பி. சிங், ஜி.எல். ஜோகி, எம்.கே. பாக்சி, ஆர்.கே. முத்கல், ஏ.கே. கோஷ், எஸ்.கே.சர்மா, எம். சுரேஷ், வி. ஸ்ரீகுமார், கே.வி. ஜெயராஜ், எஸ்.சி.பாண்டே, பி. மோகன், பிரான்சிஸ், நிகிலேஷ் மித்ரா, எம்.ஆர். வசிஷ்ட், கீதா பரத்வாஜ்,ஓம்வீர் வீர்பால் உள்ளிட்டோரும் போராட்டத்தில் உரையாற்றினர்.

முக்கியக் கோரிக்கைகள்

போராட்டத்தில் முழக்கங்களு டன் முன்வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கைகள்:

• ஓய்வூதிய விதிகள் சரிபார்ப்புச் சட்டம் - 2025-ஐ ரத்து செய்ய வேண்டும்.

• 2026-க்கு முந்தைய ஓய்வூதி யதாரர்களின் ஓய்வூதிய மாற்றி யமைப்பையும் உள்ளடக்கும் வகையில் 8-வதுஊதியக் குழுவின் ஆய்வு வரம்புகளைத் திருத்த வேண்டும்.

• பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

• பி.எஸ்.என்.எல் / எம்.டி.என்.எல்ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2017 முதல் ஓய்வூதிய மாற்றியமைப்பு வழங்க வேண்டும்.

• வங்கி ஓய்வூதியத்தைப் புதுப் பிக்க வேண்டும்.

• சி.ஜி.எச்.எஸ் மருத்துவ வசதியுடன் தன்னாட்சி அமைப்புகளை 8-வது ஊதியக் குழுவின் கீழ் கொண்டு வர வேண்டும்.

• 50 சதவீத அகவிலைப்படி, அக விலை நிவாரணத்தை ஊதியம், ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும்.

• இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

• 10 ஆண்டுகள் 8 மாதங்களுக்குப் பிறகு ஓய்வூதியத் தொகை மாற்றீட்டை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும்.

• சி.ஜி.எச்.எஸ் திட்டத்தை வலுப்படுத்தி, தங்குதடையற்ற சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

• ஓய்வூதியத்தில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்.

எச்சரிக்கை

மேற்கண்ட அனைத்துக் கோரிக்கைகளையும் உள்ள டக்கிய மனு, பிரதமருக்கு அனுப்புவதற்காகத் தர்ணாவில் ஒருமன தாக நிறைவேற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஒன்றிய அரசு தொடர்ந்து மௌனம் காத்தால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்ற உறுதியுடனும், நன்றியுரை யுடனும் பிற்பகலில் தர்ணா நிறைவடைந்தது. கடினமாக உழைத்துப் பெற்ற உரிமைகளைப் பறிக்க ஓய்வூதியதாரர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என ஒன்றிய அரசுக்கு இப்போராட்டத்த்தின் மூலம் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் சார்பாக மத்திய சங்க நிர்வாகிகள் வி.சீனிவாசலு, கே.பாபு தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்,