தில்லி: 6.5 ஆண்டுகளில் 6,500-க்கும் மேற்பட்ட நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள்!
3 hours before

தில்லியில் காற்று மாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில், கடந்த 6.5 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 6,581 நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நான்கு அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 913 பேர் உயிரிழந்துள்ளனர். சராசரியாக மாதம் 83 பேருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு ஒருவர் இந்நோயால் உயிரிழந்துள்ளார்.

பிடிஐ பாஷா செய்தி நிறுவனம், 2020 ஜனவரி 1 முதல் 2026 ஜூலை 31 வரையிலான காலகட்டத்தில், தில்லியில் உள்ள எய்ம்ஸ், ராம் மனோகர் லோகியா மருத்துவமனை (ஆர்எம்எல்), சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் தில்லி மாநில புற்றுநோய் நிறுவனம் ஆகிய நான்கு மருத்துவமனைகளிடம் விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டன.

இதில், எய்ம்ஸ் மருத்துவமனையில் 2020 ஜனவரி முதல் 2026 மார்ச் வரை 4,860 நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளும், 158 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. தில்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தில் 1,613 பாதிப்புகளும், 354 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

சப்தர்ஜங் மருத்துவமனை நுரையீரல் புற்றுநோய் உயிரிழப்பு விவரங்களை மட்டும் அளித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை.

இந்த தரவுகளின் அடிப்படையில், கடந்த 6.5 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 6,581 நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நான்கு அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 913 பேர் உயிரிழந்துள்ளனர். சராசரியாக மாதம் 83 பேருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு ஒருவர் இந்நோயால் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே, தில்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து, காற்றுத் தரக் குறியீடு 400-ஐ கடந்து 'மிக மோசம்' என்ற நிலையை எட்டியுள்ளது. காற்று மாசுபாட்டுக்கு நீண்டகாலமாக ஆளாவதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.