தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லி ஜந்தர் மந்தர் பேரணியை ஒடுக்க மோடி அரசு அடாவடி மாணவர், வாலிபர், விவசாயிகள் சங்க தலைவர்களை கைது செய்து அராஜகம்!

9 Oct 2026, 10:15 pm
தில்லி ஜந்தர் மந்தர் பேரணியை ஒடுக்க மோடி அரசு அடாவடி மாணவர், வாலிபர், விவசாயிகள் சங்க தலைவர்களை கைது செய்து அராஜகம்!

தில்லி ஜந்தர் மந்தர் பேரணியை ஒடுக்க மோடி அரசு அடாவடி மாணவர், வாலிபர், விவசாயிகள் சங்க தலைவர்களை கைது செய்து அராஜகம்!

புதுதில்லிவாக்காளர் சிறப்புத்தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மூலம் நாட்டில் ‘வாக்குத் திருட்டை’ அமல்படுத்திய தலைமைத் தேர்தல் ஆணையர்ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்திக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி), இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ) உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எப்.ஐ) மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் சனிக்கிழமையன்று தில்லி ஜந்தர் மந்தர் நோக்கி நாடு தழுவிய பேரணி மற்றும்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தனித் தீவாக மாறிய ஜந்தர் மந்தர்

இந்தப் போராட்டத்திற்கு பாரதிய கிசான் சங்கம் எனும் விவசாயிகள் அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோல, தில்லியில் கடந்த4 நாட்களாக ‘இந்தியா’ கூட்டணி தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவும் இந்தப் போராட்டத்திற்கு இருக்கும் என்பதால், தில்லியில் மத்திய ஆயுதக் காவல் படைகளின் 221படைப்பிரிவுகளைச் சேர்ந்த 23,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தில்லிகாவல்துறையினருடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

அதேபோல, வெளியில் இருந்து போராட்டக்காரர்கள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில், பொதுப்

போக்குவரத்து கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. ரயில் சேவைகளைக் குறிப்பிட்ட நேரத்துக்கு நிறுத்த

அல்லது குறைக்க மற்றும் ஓலா, உபெர் போன்ற செயலி வழி இயங்கும் டாக்சிகளின் இய க்கத்தைக் கட்டுப்படுத்தத் தில்லி காவல்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.முக்கிய நுழைவாயில்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் தில்லி ஜந்தர் மந்தர் வியாழன்று முதல் தனித்தீவாக மாறியுள்ளது.

தலைவர்கள் கைது; ஒடுக்குமுறை

அக்டோபர் 10 போராட்ட அறிவிப்பின்போதே,”தில்லி ஜந்தர் மந்தர் நோக்கி நாடு தழுவிய பேரணி மேற்கொள்ளும்போது மோடி அரசு பல்வேறு தடைகளை விதித்துஎங்களைத் தடுக்கும். அதனால் தில்லி காவல்துறை எங்களை எங்குதடுக்கிறதோ, அந்த இடம் ஜந்தர் மந்தராக மாறும்” எனக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்துள்ள ஒன்றிய பாஜக அரசு, தனது கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகளின் தலைவர்கள், கரப்பான்பூச்சி ஜனதாகட்சியின்தலைவர்கள், உறுப்பினர்களை யும், விவசாயிகள் சங்கத் தலைவர்களையும் வியாழன்று முதல் கைது செய்தும், வீட்டுக் காவலில் வைத்தும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.

உ.பி., குஜராத் மற்றும் ஆந்திரா

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் டி.ஒய்.எப்.ஐ மாநிலச் செயலாளர் ராஜ்குமார், மூத்த தலைவர் குணால் மற்றும் எஸ்.எப்.ஐ சுல்தான்பூர் மாவட்டத் தலைவர் சலில், சஹாரன்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரிப், அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் தாவூத் ராவ்ஆகியோர் காவல்துறையினர் களால் சட்டவிரோதமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்அனைவரும் அக்டோபர் 10 அன்று தில்லியை அடைவதைத் தடுப்பதற்காகவே கைது மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.அதேபோல, பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான குஜராத் தில், மாநில எஸ்.எப்.ஐ செயலாளரும், அகில இந்தியத் துணைத் தலைவருமான சத்யேஷா லீவா அம்மாநிலக் காவல்துறையால் தடுப்புக் காவலில்வைக்கப் பட்டுள்ளார். பாஜக கூட்டணி ஆட்சிநடைபெற்று வரும் ஆந்திரப் பிரதேசத்திலும் சந்திரபாபு அரசு அடக்குமுறைப் பாதையையே பின்பற்றி வருகிறது.காக்கிநாடா வில் எஸ்.எப்.ஐ தலைவர் சஹித்வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்.

ரயில்களில் பயணித்தவர்கள் கைது

தில்லியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்பதற்காக கோவா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த மாணவர்கள், மத்தியப் பிரதேசத்தின் இதார்சி பகுதியில் உள்ள உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். கைது செய்யப் பட்ட மாணவர்களில் 22 பேர் மாணவிகள் ஆவர்; அனைவரும் புனே பகுதியைச் சேர்ந்தவர்கள்.அதேபோல, பாஜக ஆளும்

மேற்கு வங்க மாநிலத்தில் அப்துல்ஹபீஸ் உட்பட சி.ஜே.பி அமைப் பின் பல தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று பாஜக ஆளும் மாநிலங்களில் தில்லியை நோக்கிப் புறப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ரயில் மற்றும் பேருந்துகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்

ரயில்கள் ரத்து

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் தில்லி நோக்கிபயணிப்பதைத் தடுக்கும் வகையில் ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. மேற்கு வங்கம், பீகார், உத்தரப்பிரதேசம் மாநிலங்களி லிருந்து தில்லி நோக்கிச் செல்லும்ஹவுரா எக்ஸ்பிரஸ், ராஜதானி எக்ஸ்பிரஸ், நியூ தில்லி சூப்பர் பாஸ்ட் (கிழக்கு மார்க்கம்), சதாப்தி எக்ஸ்பிரஸ்மற்றும் 5-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆளும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், ஒடிசா, மகாராஷ்டிரா,ஆந்திரா, கோவா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் தில்லி நோக்கிச் செல்லும் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகச் செய்தி கள் வெளியாகியுள்ளன.

சுர்ஜித் பவனில் தில்லி காவல்துறை சோதனை

இந்திய மாணவர் சங்கத் தின் மத்தியக்குழு அலுவலகமான ஹெச்.கே.எஸ். சுர்ஜித் பவனுக்கு வியாழனன்று இரவு தில்லி காவல்துறை பெரும் படையுடன் லத்தியுடன் வந்தது. எஸ்.எப்.ஐ செயல்பாட்டாளர்களைத் தேடி யதுடன், போராட்டத்தில் பங்கேற்ப தற்காக ஜந்தர் மந்தர் நோக்கி வரும் எஸ்.எப்.ஐ செயல்பாட்டாளர்களின் விவரங்களைச் சேகரிக்கவும் காவல்துறை முயன்றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.