வணிக வளாகத்தில் பெரும் தீவிபத்து
1 Jul 2026, 9:00 pm
<p><strong>வணிக வளாகத்தில் பெரும் தீவிபத்து </strong></p><p>மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள விஜய் சேல்ஸ் எலக்ட்ரானிக்ஸ் வணிக வளாகத்தில் அதிகாலை 4:15 மணி க்குத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தரைத் தளத்தில் ஏற்பட்ட தீ அனைத்துத் தளங்க ளுக்கும் பரவியுள்ளது. இதில் கட்ட டத்திற்குள் இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொ ருட்கள், மின்சாதனங்கள் மற்றும் பிற பொருட்கள் முற்றிலும் தீக்கிரையா னதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வளாகத்திற்குள் யாரும் இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. 15-க்கும் மேற்பட்ட தீய ணைப்பு வாகனங்கள் மற்றும் 75-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவச ரக்கால மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்ட றியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
