தில்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து 17 வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பலி
3 Jun 2026, 8:47 pm

தில்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து 17 வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பலி

புதுதில்லி, ஜூன் 3 - தெற்கு தில்லியின் மாளவியா நகர் (ஹவுஸ் ராணி) பகுதியில் உள்ள 5 மாடி ஹோட்டலில் புதன்கிழமை (ஜூன் 3) காலை 8:50 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.

37 பேர் படுகாயம் அடைந்த நிலையில், தீயணைப்புத் துறையின ரால் மீட்கப்பட்டு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதி கரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

விபத்தில் பலியாகி இருப்ப வர்கள், தில்லியில் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவ தற்காக வந்திருந்தவர்கள் ஆவர். இவர்கள் ‘புளோரிஷ் ஸ்டே’ (Flourish Stay) என்ற ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

இந்நிலை யிலேயே, அந்த ஹோட்டலின் அடித்தளத்தில் (Basement) இயங்கி வந்த உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டு, ஹோட்டலின் மேல் பகுதிக்கும் பரவியுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்ததால், புகை மூட்ட த்திற்குள் சிக்கிக் கொண்டனர். இந்தத் தீ அருகில் இருந்த ‘மிகாசா இன்’ (Micasa Inn) என்ற மற்றொரு ஹோட்டலுக்கும் வேகமாகப் பரவியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் லவ்கேஷ் பஜாஜ் என்பவருக்குச் சொந்தமான இந்த ஹோட்டலில் பல விதிமீறல்கள் இருந்தது தெரிய வந்துள்ளது: இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரி ழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்த வர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

சிபிஎம் இரங்கல்

தீ விபத்தில் 21 பேர் பலியான துயரச் சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு வேதனை தெரிவித்துள்ளது. “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சிபிஎம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறது. இந்த இக்கட்டான நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடனும், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளின் சமூகங்களுடனும் கட்சி உறுதுணையாக நிற்கிறது” என்று சிபிஎம் கூறியுள்ளது. மேலும், தங்குமிடங்களில் பாதுகாப்புத் தரங்களைச் செயல்படுத்துவதில் காட்டும் எந்தவொரு அலட்சியமும் மனித உயிர்களுக்கு நேரடி ஆபத்தை விளைவிக்கும் என்றும், இந்தச் சம்பவம் குறித்து, உயர் மட்டத்திலான, காலவரையறைக்கு உட்பட்ட மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் போதுமான இழப்பீடும், காயமடைந்த அனைவருக்கும் இலவசமான மற்றும் முழுமையான மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.