தில்லி தங்கும் விடுதி தீ விபத்து - மேலும் ஒருவர் கைது
6 Jun 2026, 3:52 pm
<p>தில்லி தங்கும் விடுதி தீ விபத்து சம்பவம் தொடர்பாக அங்கு பணிபுரியும் சமையல்காரர் கேசவ் நெகியை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><p>தில்லியில் உள்ள மாள்வியா நகரில், 'ப்ளரிஷ் ஸ்டே பி அண்டு பி' என்ற தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த ஆறு மாடி கட்டட தங்கும் விடுதியில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 13 வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். போலீசார் விசாரணையில், ஆறு அறைகளுக்கு மட்டுமே மாநகராட்சியில் அனுமதி பெற்ற இந்த விடுதியில், 20-க்கும் மேற்பட்ட அறைகள் இருந்துள்ளன. இதை தொடர்ந்து தங்கும் விடுதி அமைந்துள்ள கட்டத்தின் உரிமையாளர் லோகேஷ் பஜாஜ் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, தற்போது அங்கு பணிபுரியும் சமையல்காரர் கேசவ் நெகியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.</p><p>மின் அடுப்பு வெடித்ததைத் தொடர்ந்து, நெகி மின்சார இணைப்பைத் துண்டித்ததால் தங்கும் விடுதியின் மின்னணுக் கதவுகளைத் திறக்க முடியாமல் பலர் உள்ளே சிக்கிக்கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. </p>
