தீக்கதிர் விரைவு செய்திகள்
8 May 2026, 9:26 pm

தில்லியில் அதிகபட்ச தற்கொலை உயிரிழப்புகள்

தேசிய குற்ற ஆவணக் காப்ப கம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2024ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 1,70,746 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் நாட்டின் தலைநகரான தில்லியில் 2,905 தற்கொலைச் சம்பவங்கள் பதி வாகியுள்ளன. இந்த எண்ணிக்கையா னது இந்தியாவின் 53 பெருநகரங்களில் மிக அதிகபட்சமானது ஆகும். கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு 2,403 உயிரிழப்புகளுடன் இரண்டாம் இடத்திலும், சென்னை 1,525 உயிரிழப்பு களுடன் மூன்றாம் இடத்திலும், மும்பை 1,406 உயிரிழப்புகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளதாகப் பதிவாகி யுள்ளன.

தற்கொலைகளுக்கு முதன்மைக் காரணமாகக் குடும்பத் தகராறுகள் (675 உயிரிழப்புகள்) உள்ளன. திருமண வாழ்க்கை தொடர்பான பிரச்சனைகள் காரணமாக 258 பேர் உயிரிழந்துள்ளனர். வேலையின்மை காரணமாக 236 பேர் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்துகொண்டவர்களில் 71.5% பேர் ஆண்கள் (2,078 பேர்). பெண்கள் 825 பேர் மற்றும் திருநங்கைகள் 2 பேரும் அடங்குவர். குறிப்பாக தற்கொலை மூலம் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (சுமார் 55.6%) திருமணமா னவர்கள். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குக் குறைவாக உள்ள ஏழை, நடுத்தர வர்க்கத்தினரிடையே தற்கொலைகள் அதிகம் காணப்படு கின்றன.

உதவிக்கு...

தற்கொலை எண்ணங்கள் தோன்றி னால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், ஒன்றிய அரசின் TELE MANAS (14416) என்ற இலவச உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

பீகாரில் அதிர்ச்சி மதிய உணவில் பாம்பு : 250 மாணவர்கள் பாதிப்பு

பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் சகர்சா மாவட்டம் பாலுகா அரசு நடுநிலைப் பள்ளியில் வெள்ளியன்று மாணவர்களுக்கு அரிசி, பருப்பு சாதம் வழங்கப்பட்டது. இந்த உணவை உட்கொண்ட 250க்கும் மேற் பட்ட மாணவர்கள் வயிற்று வலி, வாந்தி, தலைசுற்றல் மூலம் பாதிக்கப் பட்டனர். உணவை ஆராய்ந்த போது அதில் சிறிய பாம்புக் குட்டி ஒன்று கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் உட னடியாக மஹிஷி சுகாதார மையம், சகர்சா சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். மாணவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். உணவுப் பாத்திரத்தில் பாம்பு கிடந்ததைக் கேள்விப்பட்ட பெற் றோர்களும் கிராம மக்களும் பள்ளியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் கார ணம் என அவர்கள் குற்றம் சாட்டினர்.