தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘நியூஸ் கிளிக்’ மீதான வழக்குகளை ரத்து செய்தது தில்லி உயர்நீதிமன்றம் மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு சம்மட்டி அடி!

12 Jun 2026, 9:03 pm
‘நியூஸ் கிளிக்’ மீதான வழக்குகளை ரத்து செய்தது தில்லி உயர்நீதிமன்றம் மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு சம்மட்டி அடி!

‘நியூஸ் கிளிக்’ மீதான வழக்குகளை ரத்து செய்தது தில்லி உயர்நீதிமன்றம் மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு சம்மட்டி அடி!

துதில்லி, ஜூன் 12- சுதந்திர ஊடகமான ‘நியூஸ் கிளிக்’ (NewsClick) இணைய இதழ் மற்றும் அதன் நிறுவனரும் மூத்த பத்திரிகை யாளருமான பிரபீர் புர் காயஸ்தாவுக்கு ஆகியோருக்கு எதிராக மத்திய விசார ணை அமைப்புகளால் தொடுக்கப்பட்ட வழக்குகளை மே 29 அன்று தில்லி உயர்நீதிமன்றம் முற்றிலுமாக ரத்து செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் தன்னிச்சையான மற்றும் பழிவாங்கும் நோக்கிலான இந்த நடவடிக்கைகள், “சட்ட நடை முறைகளை மிக மோசமாக துஷ்பிர யோகம் செய்த செயலாகும்” என்று நீதி மன்றம் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இத்தீர்ப்பு ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா ஜூன் 10 அன்று பிறப்பித்துள்ள இந்த 73 பக்க விரிவான தீர்ப்பு, இந்தியாவில் நசுக்கப்பட்டு வரும் கருத்துச் சுதந்திரத்திற்கும், மக்கள் பக்கம் நின்று கேள்வி கேட்கும் நேர்மையான பத்திரிகை உலகிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.

“அமலாக்கத்துறை அதிகாரத்தை அராஜகமாக துஷ்பிரயோகம் செய்துள்ளது”: உயர்நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம்

தில்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) கடந்த 2020 ஆகஸ்டில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தொடுத்த பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) வழக்கு ஆகிய இரண்டையும் தள்ளுபடி செய்து நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா தனது தீர்ப்பில் வழங்கி யுள்ள முக்கிய சட்ட விளக்கங்கள் பின்வருமாறு:

அதிகார அத்துமீறல் மற்றும் உள்நோக்கம் (Mala Fide): நியூஸ் கிளிக் மற்றும் பிரபீர் புர்காயஸ்தாவுக்கு எதி ராக அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை அல்ல; அவை முற்றிலும் தீய உள் நோக்கம் கொண்டவை. இது சுதந்திர மான, நடுநிலையான பத்திரிகைச் செயல்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட ஒரு தன்னிச்சையான தாக்குதல் மற்றும் அதிகார வரம்பை மீறிய அராஜகச் செயலாகும்.

எந்தவொரு குற்றமும் நிகழவில்லை: நியூஸ் கிளிக் நிறுவனம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை பெற்றதில் எந்தவித சட்ட மீறலும், எஃப்.டி.ஐ விதிமுறை களின் மீறலும் இல்லை. அரசின் தரப்பில் கூறப்பட்ட ஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை துரோகம் (Criminal Breach of Trust) போன்ற இந்தியத் தண்ட னைச் சட்டக் குற்றச்சாட்டுகள் எள்ளள வும் இதில் பொருந்தாது. எந்தவொரு முதன்மைக் குற்றமும் நிகழாத போது, அங்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவே இடமில்லை.

பாதிக்கப்பட்டவர் இல்லாத பொய் வழக்கு: ஏமாற்றுதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டுமானால், அதனால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் இருக்க வேண்டும். நியூஸ் கிளிக் நிறுவனத்தில் முதலீடு செய்த அமெரிக்க நிறுவனம் (Worldwide Media Holdings LLC) தங்களை யாரும் ஏமாற்றவில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. முதலீட்டாளரே திருப்தியாக இருக்கும்போது, சம்பந்தமே இல்லாத மூன்றாவது தரப்பான ரிசர்வ் வங்கி யின் சில தற்காலிகக் கடிதங்களை வைத்துக் கொண்டு, அமலாக்கத்துறை இந்த வழக்கை ஜோடித்ததே சட்டத்திற்குப் புறம்பானது.

வீண் தேடுதல் வேட்டை : முறையான அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி, ஒரு நிறுவனத்தின் நிதி விவ காரங்களை ஏதோ ஒரு தவறு கிடைக்கும் என்ற நோக்கில் கிளறிப் பார்க்கும் வீண் முயற்சியாகவே அமலாக்கத்துறையின் ஒட்டுமொத்த விசாரணையும் அமைந்துள்ளது. இது சட்டத்தின் ஆட்சிக்கே எதிரானது என்று நீதிமன்றம் சாடியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தை மூடிமறைக்க நடந்த பாசிச சதி

​​​​​​மோடி அரசின் கார்ப்பரேட் சார்புக் கொள்கைகளையும், மக்கள் விரோதச் சட்டங்களையும் துணிச்சலு டன் கேள்வி கேட்டு வந்த ஒரே கார ணத்திற்காகவே நியூஸ் கிளிக் திட்ட மிட்டு இலக்கு வைக்கப்பட்டதாகப் பல்வேறு அமைப்புகள் சுட்டிக்காட்டி யுள்ளன. குறிப்பாக, தில்லியில் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தை உலகறியச் செய்து, கார்ப்பரேட்டுகளின் நில அபகரிப்பு சூழ்ச்சிகளை நியூஸ் கிளிக் மட்டுமே தொடர்ந்து களத்திலிருந்து அம்பலப் படுத்தியது.

இதனாலேயே, ஆத்திரமடைந்த ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணி அரசு, “விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைக்கிறது”, “தில்லி கலவரத்தைத் தூண்ட சதி நடக்கிறது”, “சீன ஆதரவு பிரச்சாரம் செய்யப்படுகிறது” என்ற அபாண்ட மான கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டது. இந்த ஜோடிக்கப்பட்ட கதைகளின் அடிப்படையிலேயே, 2023 அக்டோபரில் 73 வயதான மூத்த பத்திரிகையாளர் பிரபீர் புர்காயஸ்தா கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான ‘உபா’ (UAPA) வின்கீழ் கைது செய்யப்பட்டு, சுமார் 226 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். நியூஸ் கிளிக் அலுவலகம், ஊழியர் களின் வீடுகள் என 88 இடங்களில் கடு மையான முறையில் சோதனைகள் நடத்தப்பட்டு, பெண் பத்திரிகை யாளர்கள் உள்பட 46-க்கும் மேற்பட் டோர் கடுமையான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களின் 300-க்கும் மேற்பட்ட கணினிகள் மற்றும் அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு செய்தி அறையே முடக்கப்பட்டது

வர்க்கப் போராட்டக் குரலை நசுக்க முயற்சி: சிஐடியு கண்டனம்

தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை சிஐடியு பொதுச் செயலாளர் எளமரம் கரீம் மனதார வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தத் தீர்ப்பு ஒரு பெரும் நிம்மதியைத் தந்திருந்தா லும், பாசிசத்தனமான அரசால் ஏற்பட்ட வடுக்கள் ஆழமானவை. கார்ப்பரேட் சுரண்டல், தொழிலா ளர் வர்க்கத்தின் போராட்டங்கள், வேலை யில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைத் துணி வோடு வெளியிடும் மாற்று ஊடகங்களை ஒடுக்கும் ஒரு திட்டமிட்ட பாசிச சதியின் பகுதியே இந்தத் தாக்குதல். கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் அரசின் ஊதுகுழலாக மாறிவிட்ட சூழலில், நியூஸ்கிளிக் போன்ற நேர்மை யான ஊடகங்களின் குரலை நசுக்குவது உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்தின் மீதான தாக்குதலாகும். உபா மற்றும் பிஎம்எல்ஏ போன்ற முற்போக்கு சிந்தனையாளர்களை ஒடுக்கும் கருப்புச் சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி யுள்ளார்.

பிரதமரும், உள்துறை அமைச்சரும் மன்னிப்பு கேட்க வேண்டும்: விவசாய சங்கங்கள் கோரிக்கை

அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய விசாரணை முகமைகள் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் கைப்பாவையாக மாறிச் செயல்படுவதை இந்தத் தீர்ப்பு முழுமை யாக அம்பலப்படுத்தியுள்ளது. தேசபக்தி மிக்க இந்திய விவசாயிகளையும், தொழிலாளர் களையும் ‘அந்நிய கைக்கூலிகள்’ எனச் சித்த ரித்து அவதூறு பரப்ப நியூஸ்கிளிக் வழக்கை மோடி அரசு ஆயுதமாகப் பயன்படுத்தியது.

இதற்காகப் பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பழிவாங்கும் அரசியலால் வேலைவாய்ப்புகளையும், வரு மானத்தையும், சமூக நன்மதிப்பையும் இழந்த நியூஸ்கிளிக் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத் திற்கு ஒன்றிய அரசு உரிய நிதி இழப்பீடு வழங்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் தொலைபேசிகளை உடனடியாகத் திருப்பித் தர வேண்டும். பொய் வழக்கு தொடுத்த அதிகாரிகள் மீது குற்ற வியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பின் மூலம் அமலாக்கப் பிரிவு தொடுத்த வழக்கு தவிடுபொடியாகியுள்ள நிலையில், நியூஸ்கிளிக் மீதான மற்ற பொய் வழக்குகளும் விரைவில் முழுமையாகச் சரிந்து விழும் என்று ஜனநாயகச் சக்திகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.