நியூஸ் கிளிக் மீதான வழக்கு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்
11 Jun 2026, 8:37 pm

நியூஸ் கிளிக் மீதான வழக்கு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்

தில்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

வெளிநாட்டு முதலீட்டு விதி களை மீறியதாக ‘நியூஸ் கிளிக்’ செய்தி நிறுவனம், அதன் நிறு வனர் பிரபீர் புர்காயஸ்தா மீது தொட ரப்பட்ட வழக்குகளை தில்லி உயர் நீதி மன்றம் அதிரடியாக ரத்துசெய்துள்ளது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “இந்த விசாரணை முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது; சுதந்திரமான பத்திரிகைத்துறை மீதான தன்னிச்சையான தாக்குதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம்” என்று கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. மேலும், குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், இந்த வழக்கை மேற்கொண்டு நடத்துவது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதற்குச் சமம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.