முந்தய பக்கம்

டிஜிசிஏ-விற்கு  தில்லி உயர்நீதிமன்றம் கெடு

30 Jan 2026, 2:24 pm
டிஜிசிஏ-விற்கு  தில்லி உயர்நீதிமன்றம் கெடு
<p><strong>டிஜிசிஏ-விற்கு &nbsp;தில்லி உயர்நீதிமன்றம் கெடு</strong></p> <p>விமானிகளின் பணி நேரக் கட்டுப்பாடு மற்றும் சோர்வு மேலாண்மை (Flight Duty Time Limitation - FDTL) தொடர்பான புதிய விதிகளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்த வழக்கு வெள்ளி யன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. &nbsp;சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர் அஞ்சனா கோசைன், &ldquo;விமானிகளுக்கு வாராந்திர ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்ற விதி தவிர்க்க முடியாதது. இதில் எந்த ஒரு விமான நிறுவனத்திற்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. இண்டிகோ நிறு வனத்திற்குத் தற்காலிகத் தளர்வுகள் (இரவு நேரப் பணிகளுக்கு - பிப்., 10 வரை) வழங்கப்பட்டுள்ளன&rdquo; என வாதிட்டார். &nbsp;விசாரணையின் போது குறுக்கிட்ட தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரதிபா எம்.சிங், அமித் சர்மா அமர்வு,&rdquo;இரவு நேரப் பணிகளுக்கான தளர்வுக்கு ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாராந்திர ஓய்வு, விடுமுறை தொடர்பான விதிகளில் அளிக்கப் பட்டுள்ள தளர்வுகளுக்கு ஏன் காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை?&rdquo; என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து விரிவான பதிலைத் தாக்கல் செய்ய டிஜிசிஏ மற்றும் இண்டிகோ நிறுவ னத்திற்கு 2 வார கால அவகாசம் வழங்கி யுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram