தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சோனம் வாங்சுக்கின் உயிரைக் காக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

16 Jul 2026, 9:05 pm
சோனம் வாங்சுக்கின் உயிரைக் காக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

சோனம் வாங்சுக்கின் உயிரைக் காக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தில்லி ஜந்தர் மந்தரில் 19ஆவது நாட்களாக உண்ணாவிரதம் இருக் கும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உயிரைக் காப்பாற்ற அரசு அவசரமாகத் தலையிடக் கோரி வழக்கறி ஞர் ராகேஷ் குமார் சைனி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு தில்லி உயர்நீதிமன்றத்தில் வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஒன்றிய அரசு மற்றும் தில்லி அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,“ஒவ்வொரு தனிநபரின் உயிரும் விலைமதிப்பற்றது. வாங்சுக் கின் உடல்நிலையை தொடர்ந்து பரி சோதிப்பதில் அரசுக்கு எந்த ஆட்சேப ணையும் இல்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அமர்வு,”சொலிசிட்டர் ஜெனரல் எடுத்துள்ள நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். ஒவ்வொரு குடிமக னின் உயிரும் மிக முக்கியமானது. அந்த உயிரைக் காக்க அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அவரது உடல்நிலையை ஒவ்வொரு நாளும் கண்காணிக்க வேண்டும்.

தேவைப்படும் மருத்துவ நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்” என ஒன்றிய, தில்லி பாஜக அரசுகளுக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,”அரசு மருத்து வர்கள் வாங்சுக்கின் உடல்நிலையை தினசரி கண்காணிப்பார்கள். அதே போல மருத்துவர்களின் ஆலோசனையின்படி, அவரது உடல்நிலை மோசமடைவதைத் தடுக்கத் தேவையான மருத்துவ நட வடிக்கைகள் எடுக்கப்படும்” என நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.