தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுபானக் கொள்கை வழக்கில் நீதிபதியை மாற்றக் கோரும் சிபிஐ தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மறுப்பு

15 Mar 2026, 4:11 pm
மதுபானக் கொள்கை வழக்கில் நீதிபதியை மாற்றக் கோரும் சிபிஐ தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மறுப்பு
<p><strong>மதுபானக் கொள்கை வழக்கில் நீதிபதியை மாற்றக் கோரும் சிபிஐ&nbsp;தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மறுப்பு</strong></p> <p>புதுதில்லி தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட தில்லி முன்னாள் முத லமைச்சரும், ஆம் ஆத்மி தலைவ ருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன் &nbsp;னாள் தில்லி துணை முதலமைச்சர் &nbsp;மணீஷ் சிசோடியா (ஆம் ஆத்மி), &nbsp;தெலுங்கானா முன்னாள் எம்எல்சி கவிதா உள்ளிட்ட 23 பேரை பிப். 27 &nbsp;அன்று தில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. &nbsp;இந்த உத்தரவை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ &nbsp;(மத்திய புலனாய்வு) மேல்முறை யீடு செய்த மனு மார்ச் 9 அன்று நீதி பதி சுவர்ணா காந்த சர்மா அமர் &nbsp;வில் விசாரணைக்கு வந்தது. சிபிஐ யின் மனுவை விசாரணைக்கு ஏற்ப தாக கூறிய, நீதிபதி சுவர்ணா காந்த &nbsp;சர்மா கெஜ்ரிவால் உள்ளிட்ட 23 &nbsp;பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 16ஆம் (திங்களன்று) தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே, மதுபானக் கொள்கை வழக்கின் மேல்முறை யீட்டு மனுவை நீதிபதி சுவர்ண காந்த &nbsp;சர்மாவிடமிருந்து வேறு நீதி பதிக்கு மாற்ற வேண்டும் என சிபிஐ &nbsp;கோரிக்கை விடுத்தது இருந்தது. &nbsp;ஆனால் தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத் யாயா சிபிஐ கோரிக்கையை நிரா கரித்துள்ளார். சிபிஐ கோரிக்கை மனுவிற்கு பதில் அளித்த தில்லி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா,&rdquo;நீதிபதி சுவர்ண காந்த சர்மா தற்போதுள்ள நீதி மன்றப் பணி ஒதுக்கீட்டின் (Roster) &nbsp;அடிப்படையிலேயே இந்த மனு வை விசாரித்து வருகிறார். இதில் &nbsp;நிர்வாக ரீதியாக மாற்றம் செய்வ தற்கு எந்த முகாந்திரமும் இல்லை&rdquo; &nbsp;என உத்தரவிட்டுள்ளார். இன்று மீண்டும் விசாரணை நீதிபதியை மாற்றக் கோரும் சிபிஐ மனு நிராகரிக்கப்பட்ட நிலை யில், மதுபானக் கொள்கை வழக்கின் மேல்முறையீட்டு மனு வின் 2ஆம் கட்ட விசாரணை திங்க ளன்று நீதிபதி ஸ்வர்ண காந்த &nbsp;சர்மா அமர்விலேயே &nbsp;விசார ணைக்கு வரவுள்ளது என்பது குறிப் &nbsp;பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.