முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

7 Jul 2026, 9:45 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே

எங்களுடைய அசல் டுவிட்டர் எக்ஸ் கணக்கான @CJP_2029 பக்கத்தின் முடக்கத்தை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வெற்றி கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு மட்டுமானது அல்ல; மாறாக கருத்துச் சுதந்திரத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும். இளைஞர்களின் குரலை நாங்கள் தொடர்ந்து ஓங்கி ஒலிப்போம்.

அவுட்லுக் நிறுவனர் சபீர் பாட்டியா

ஒன்றிய அரசு ‘துரந்தர்’ திரைப்படத்தை அனுமதிக்கும் போது, ‘சட்லஜ்’ திரைப்படத்தையும் அனுமதிக்க வேண்டும். ஒரு ஜனநாயகம் என்பது மாற்றுக்கருத்துக்கள் அல்லது போட்டி கருத்துக்களுக்கு அஞ்சக்கூடாது. மக்கள் எதையும் பார்க்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும், தங்களுக்குள் முடிவெடுக்கவும் அனுமதிக்க வேண்டும்.

ஸ்பானிஷ் நடிகர் ஜாவியர் பார்டெம்

அமெரிக்க ஜனாதிபதி ‘நான் தான் இந்த உலகின் மன்னர்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். போர்களில் தலையிடுவது போல உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்குள்ளேயும் நுழைந்து ரெட் கார்டு விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்கா உலகக்கோப்பை போட்டியை நடத்தலாம்; ஆனால் அதில் தலையிட உரிமை இல்லை.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பூபேஷ் பாகேல்

ராமர் கோவிலுக்கான பூமி பூஜை, குடமுழுக்கு விழாக்களையும் பிரதமர் மோடி தான் முன்னின்று நடத்தினார். அதற்கான அறக்கட்டளைகளை அமைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றினார். ஆனால் ராமர் கோவில் நன்கொடை முறைகேடு புகார் விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்?

Share
FacebookXWhatsAppTelegram