தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டெலிகிராம் தடைக்கு எதிரான மனு தீர்ப்பை ஒத்திவைத்த தில்லி நீதிமன்றம்

18 Jun 2026, 8:34 pm
டெலிகிராம் தடைக்கு எதிரான மனு தீர்ப்பை ஒத்திவைத்த  தில்லி நீதிமன்றம்

டெலிகிராம் தடைக்கு எதிரான மனு தீர்ப்பை ஒத்திவைத்த தில்லி நீதிமன்றம்

ஜூன் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நீட்-யுஜி மறுதேர்வுக்கு முன்னதாக, டெலிகிராம் குறுஞ்செய்தி செயலியின் பயன்பாட்டைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்துவதற்கான ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக டெலிகிராம் தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான மனு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி தேஜஸ் காரியா தலைமை யிலான கோடைகால விடுமுறைக் கால அமர்வு இருதரப்பு டெலிகிராம் செயலியின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துருவ் மேத்தா, ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோ ரின் வாதங்களைக் கேட்டறிந்த பின்னர் நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார். மேலும் இரு தரப்பினரும் தங்களது எழுத் துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்கு மாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பிரமா ணப் பத்திரத்தில்,“அச்சுறுத்தும் சக்தி களை இணைக்கும் புதிய கருப்பு இணையமாக டெலிகிராம் மாறி யுள்ளது.

தவறான இணையதள இணைப்பு களை பதிவிட குற்றவாளிகள் டெலி கிராமை பயன்படுத்துகின்றனர். இது, குற்றவாளிகளை கண்காணித்து அடை யாளம் காண்பதை அதிகாரிகளுக்கு கடினமானதாக்குகிறது. டெலிகிராமின் தனியுரிமை மற்றும் அடையாளம் மறைப்பு அம்சங்கள், குற்றத்தில் ஈடுபடும் குழுக்களுக்கு சாதகமாக உள்ளன. டெலிகிராம் பயனர்கள், தனியுரிமை அமைப்புகள் மூலம் தொலைபேசி எண்கள் மற்றும் டெலிகிராம் முகவரி போன்ற அடையாளங்களை மறைக்க முடிகிறது. சைபர் குற்றங்கள் தொ டர்பான கவலைகளைத் தவிர, திருட்டுத்தனமான திரைப்படங்கள், வலைத்தொடர்கள், பிற பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களை விநியோ கிக்க டெலிகிராம் சேனல்கள் பரவலா கப் பயன்படுத்தப்படுகின்றன. இது உள்ள டக்கத்தை உருவாக்குபவர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்துவதோடு, அறிவுசார் சொத்துரிமை குறித்த கவ லைகளையும் எழுப்புகிறது” என தெரி விக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.