தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு எதிராகத் தடை கோரி மனு

5 Jun 2026, 9:10 pm
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு எதிராகத் தடை கோரி மனு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு எதிராகத் தடை கோரி மனு

புதுதில்லி சமூக ஊடகங்கள் வழி யாகத் தொடங்கப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்று வரும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party - CJP) நீட் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர் களுக்கு நீதி கோரியும், தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு களைக் கண்டித்தும் ஜூன் 6 சனி யன்று நாடு தழுவிய அளவில் பெரிய அளவிலான போராட்ட த்தை நடத்த உள்ளதாக அறிவித்து ள்ளது.

அதே சமயம் தில்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட அமைதிப் போராட்டத்தை நடத்த உள்ளதாக வும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யின் நிறுவனர் அபிஜித் தீப்கே கூறியுள்ளார்.

இந்நிலையில், மோடி அர சுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி அறிவித்துள்ள போராட்டத் திற்கு தடை விதிக்கக் கோரி ‘சேவ் இந்தியா பவுண்டேஷன்’ என்ற அமைப்பு தில்லி உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சவுரப் பானர்ஜி, அமித் சர்மா ஆகி யோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சர்மா நக் வான், “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சமூக ஊடகங்கள் வழியாக ஒருங் கிணைக்கப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

ஜூன் 6 அன்று தில்லி ஜந்தர் மந்தர், பிற பகுதிகளில் பெருமளவில் கூடு மாறு அழைப்பு விடுத்துள்ளது.

மக்களைத் திரட்டுவதற்காக வெளி யிடப்படும் சில ஆன்லைன் பதிவு களில் வன்முறையைத் தூண்டும் செய்திகள், சட்ட அமலாக்கத் துறையினருக்கு எதிர்ப்புத் தெரி விப்போம் என்ற மிரட்டல்கள், பொது உள்கட்டமைப்புகளை முடக்குவதற்கான அழைப்பாக உள்ளது.

போராட்டக்காரர்கள் பெருமளவில் ஒன்று திரள ஊக்கு விக்கப்படுவதால், இதைக் கட்டுப்ப டுத்தாவிட்டால் தில்லியின் பொதுப் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம்” என வாதிட்டார்.

ஆனால் இதனை அவசரப் பட்டியலின் கீழ் விசாரிக்க தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.