சோனம் வாங்சுக்கை மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்ற தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
19 Jul 2026, 9:22 pm

சோனம் வாங்சுக்கை மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்ற தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

புதுதில்லி சமூக ஆர்வலர் சோனம் வாங் சுக் நீட் தேர்வு முறைகேடு களுக்கு எதிராக, ஜூன் 28-ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைச் சாக்காகக் கொண்டு, ஜூலை 18-ஆம் தேதி காலை தில்லி காவல்துறை யினர் சோனம் வாங்சுக்கை ஜந்தர் மந்தரிலிருந்து அப்புறப்படுத்தி சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து, “எனது கணவர் விருப்பமின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார்; அவர் விரும்பும் மருத்துவ மனைக்கு மாற்ற அனுமதிக்கப்பட வில்லை” என்று சோனம் வாங்சுக் கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தபோதி லும், இவ்விவகாரத்தின் அவச ரத்தைக் கருத்தில் கொண்டு வழக்கை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

சிகிச்சை அறையில் காவல்துறை கட்டுப்பாடு

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், விவேக் டங்கா மற்றும் அகில் சிபல் ஆகியோர் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கர்ணா அமர்வு முன்பு வாதிடுகையில், “சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பிறகு, வாங்சுக் தனது வழக்கறி ஞர்கள் மற்றும் மருத்துவர்களை அணுகும் வாய்ப்பை இழந்துள்ளார். சிகிச்சை அறைக்குள் அவரைச் சுற்றி காவல்துறையினர் நிறுத்தப்பட் டுள்ளனர். மருத்துவர்களை விட அவர் மீது காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அவர் எந்தத் தடுப்புக் காவலும் இல்லை, அவர் மீது எந்த வழக்கும் இல்லை. ஒரு இந்தியக் குடிமகன் தான் விரும்பும் மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில் லையா? நாங்கள் அவரை மேதாந்தா (தனியார்) மருத்துவமனைக்கு மாற்ற விரும்புகிறோம். அங்கு எய்ம்ஸ் அல்லது சப்தர்ஜங் மருத்து வர்கள் குழு இணைந்து சிகிச்சை அளிக்கத் தங்களுக்கு எந்த ஆட் சேபணையும் இல்லை” என்று வாதிட்டனர்.

ஒன்றிய அரசின் வாதம்

இதற்கு ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜென ரல் சேத்தன் சர்மா, “வாங்சுக் 18 நாட்க ளாக உண்ணாவிரதம் இருப்பதால் அவருக்கு மருத்துவப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எய்ம்ஸ் மற்றும் சப்தர்ஜங் மருத்துவர்கள் குழு அவருக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. ஆனால், அவர் சிகிச் சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். வாங்சுக்கிற்கு அளிக்கப்படும் அனைத்து மருத்துவச் சிகிச்சைக ளையும் அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்று ஜூலை 16-ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தர வில் தெளிவாக உள்ளது” என்று வாதிட்டார்.

உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு மறுப்பு

இறுதியாக நீதிபதி மினி புஷ்கர்ணா பிறப்பித்த உத்தரவில், “சோனம் வாங்சுக்கின் உடல்நிலை யைக் கருத்தில் கொண்டு அரசு அவரை மருத்துவமனையில் அனு மதித்தது தன்னிச்சையான நட வடிக்கை அல்ல. வாங்சுக் தனது உடல்நிலை மோசமடைந்த நிலையி லும் தானாக முன்வந்து மருத்துவ மனையில் சேராததால், அவரது உயிரைக் காக்க அரசு தலையிட்ட தில் தவறில்லை. அவர் மருத்து வர்களின் கண்காணிப்பில் இருப்ப தையும், எலக்ட்ரோலைட் (உடலின் செயல்பாட்டிற்கு இன்றியமையாத கனிமங்கள்) எடுத்துக்கொள்ள ஒப் புக்கொண்டதையும் கவனத்தில் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார். இதன் மூலம், சோனம் வாங் சுக்கை சப்தர்ஜங் மருத்துவமனை யிலிருந்து அவர் விரும்பும் மருத்து வமனைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால உத்தரவைப் பிறப்பிக் கத் தில்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.