நீதி வென்றது; பாசிசப் பொய்கள் சுக்குநூறாகச் சிதறின! - சிபிஎம் மத்தியக் குழு
11 Jun 2026, 3:12 pm

நியூஸ்க்ளிக் செய்தி நிறுவனம் மற்றும் அதன் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவுக்கு எதிராக வழக்குகளை தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், நீதி வென்றது; பாசிசப் பொய்கள் சுக்குநூறாகச் சிதறின என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு தெரிவித்துள்ளது.

நியூஸ்க்ளிக் செய்தி நிறுவனம் மற்றும் அதன் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவுக்கு எதிராக பொருளாதாரக் குற்றப்பிரிவு தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையும், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கையும் தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இவ்வழக்கில் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைகள் "உள்நோக்கம் மேற்கொள்ளப்பட்டவை மட்டுமல்லாமல், மனுதாரர்களின் சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற பத்திரிகைச் செயல்பாட்டின் மீதான தன்னிச்சையான தாக்குதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம்" என்றும் நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஎம் மத்தியக் குழு தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

"நீதி வென்றது; பாசிசப் பொய்கள் சுக்குநூறாகச் சிதறின! பத்திரிகையாளர்களை அச்சுறுத்தவும், மாற்றுக்கருத்துகளை ஒடுக்கவும், ஊடகச் சுதந்திரத்தை நசுக்கவும் விசாரணை முகமைகளை தவறாகப் பயன்படுத்தும் மோடி அரசயே இத்தீர்ப்பு மிகக் கடுமையாக சாடுகிறது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.