தில்லி எப்போது பாடம் கற்கும்?
6 Jun 2026, 12:50 am

தில்லி எப்போது பாடம் கற்கும்?

தலைநகர் தில்லியில் தீ விபத்துகள் சாதாரண நிகழ்வுகளாக மாறிவிட்டன. அண்மையில் மாள்வியா நகர் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 உயிர்கள் பலியானதும், வெளி நாட்டினர் உட்பட பலர் பாதிக்கப்பட்டதும், தலை நகரின் தீயணைப்பு பாதுகாப்பு அமைப்பின் மீதான மீள முடியாத கறையாகும். 28 ஆண்டு களுக்கு முன் நிகழ்ந்த கோரமான ‘உப்ஹார் திரை யரங்கத் தீ விபத்தில்’ 59 உயிர்களைப் பலி கொடுத்த பிறகும், தில்லி அரசும் அதிகார வர்க்க மும் எவ்விதப் பாடத்தையும் கற்றுக்கொள்ள வில்லை என்பது வெட்கக்கேடானது.

உப்ஹார் வழக்கில் தண்டனை பெற்ற உரிமை யாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட ரூ. 60 கோடியில், காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை மையம் அமைக்கப்படும் என அளிக் கப்பட்ட உறுதிமொழி, பத்தாண்டுகள் கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. நீதி வழங்கப்பட்ட தாகச் சொல்லப்படும் காகிதங்கள், நடைமுறை யில் எந்தப் பயனும் தராமல் இருப்பது நீதியைப் பரிகாசம் செய்வதாகும்.

இந்த அலட்சியத்தின் விளைவே மாள்வியா நகர் விபத்து. இந்தக் கட்டடத்தில் முறையான தீயணைப்பு வசதிகள் எதுவுமில்லை. கட்ட டத்தின் அமைப்பு தீயணைப்பு பாதுகாப்பு விதி முறைகளின்படி இல்லை. ஒரே ஒரு நுழைவு மற்றும் வெளியேறும் வழி மட்டுமே இருந்தது. பொதுவான படிக்கட்டுகள் வழியாகவே மேல் தளங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையே இருந்தது. தில்லி மாநகராட்சி தகவல்களின்படி, ஆறு அறைகளுக்கு மட்டுமே அனுமதி பெற்ற இந்த விடுதி, 20-க்கும் மேற்பட்ட அறைகள் இருந்துள்ளன. இதற்கு எங்கிருந்து அனுமதி கிடைத்தது? இது ஊழலின் வெளிப்பாடா அல்லது அதிகாரிகளின் அலட்சியமா? அரசு நிர்வாகத்தின் இந்த பொறுப்பற்ற தன்மைதான், அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி வாங்கியுள்ளது.

இனிவரும் காலங்களில், வெறும் நிவாரணத் தொகைகளையும், பெயரளவிலான விசாரணை களையும் அறிவிப்பதோடு அரசு நிறுத்திக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு வணிக வளாகம், ஹோட்டல் மற்றும் மக்கள் கூடும் இடங்களிலும் தீயணைப்பு பாதுகாப்பு தணிக்கையை முறையா கவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும். விதிமீறல் கண்டறியப்படும் இடங்களில், பாரபட்ச மின்றி உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.

விடுதி அமைந்துள்ள கட்டடத்தின் உரிமை யாளர் லோகேஷ் பஜாஜ் கைது செய்யப் பட்டுள்ளார். ஆனால், தில்லியின் நிர்வாகக் கட்டமைப்பு மக்களின் உயிர்களுக்குப் பாது காப்பு அளிக்கத் தவறிவிட்டது. உப்ஹார் விபத்தின் வடுக்கள் இன்னும் ஆறாத நிலை யில், மேலும் உயிர்களை இழக்கும் அவலம் தொடர்வது வேதனையளிக்கிறது. அதிகாரிக ளின் அலட்சியத்தை, துணிச்சலான சட்ட நட வடிக்கைகள் மூலம் போக்கினால் மட்டுமே, தலைநகர் தில்லி இனி பாதுகாப்பான நகர மாக இருக்கும்.