முந்தய பக்கம்

தில்லி: இரு நாட்கள் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி

yesterday
தில்லி: இரு நாட்கள் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி
<p>தில்லியில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் மட்டும் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.</p><p>தில்லியில் காற்று மாசின் அளவு மிக அதிகமாகப் பதிவாகி வரும் நிலையில், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 7, 8 ஆகிய இரண்டு நாட்களில் காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.</p><p>மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார மையங்கள், முதியோர் இல்லங்களில் உள்ளிட்ட இடங்களில் இருந்து 300 மீட்டர் சுற்றளவுக்குள் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது</p><p>மேலும், நவம்பர் 9ஆம் தேதி முதல் பட்டாசு வெடிக்கத் தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram