அமித் ஷா காவல்துறைக்கு தில்லி நீதிமன்றம் கடும் கண்டனம்
8 Mar 2026, 3:42 pm
<p><strong>அமித் ஷா காவல்துறைக்கு தில்லி நீதிமன்றம் கடும் கண்டனம்</strong></p>
<p>புதுதில்லி 2025ஆம் ஆண்டு பிப்., 6ஆம் தேதி ‘பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) வழிகாட்டுதல் வரைவு 2025’-க்கு எதிராக திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் தலை மையில் தில்லி ஜந்தர் மந்தரில் போராட் டம் நடைபெற்றது. கூட்டம் நடந்த போது ஜந்தர் மந்தரில் பாரதிய நாக ரிக் சுரக்சா சன்ஹிதாவின் (பிஎன் எஸ்எஸ்) பிரிவு 163 (கூட்டமாக கூடத் தடை) அமலில் இருந்ததாகவும், அனு மதியின்றி போராட்டம் நடத்தியதாகவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.இந்நிலையில், ஜந்தர் மந்தர் போராட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தாக் கல் செய்த தில்லி காவல்துறை, ”குற்றப்பத்திரிகையில் இடம்பெற் றுள்ள நபர்களை மேல் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்” என அனுமதி கோரியது. வழக்கை விசாரித்த ரோஸ் அவென்யூ நீதிமன்ற கூடுதல் நீதிபதி பரஸ் தலால் வாதங்களுக்குப் பிறகு, ”இந்தக் குற்றப்பத்திரிகை எந்தவித சிந்தனையும் இன்றி, இயந்திரத்தன மான முறையில் தாக்கல் செய்யப்பட் டுள்ளது. வழக்கின் விசாரணை அதி காரி நீதிமன்றத்தின் கவனத்திற்கு எந்த வொரு புதிய ஆதாரத்தையும் கொண்டு வராமல், மேல் விசாரணைக்கு அனு மதி கோரி விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார். இது ஏன்? விசாரணை யை எப்போது முடிப்பார்கள் என்ற தெளி வான காலவரிசையையும் காவல்துறை வழங்கவில்லை. இது வெறும் கவனக் குறைவு அல்ல. விசாரணை அதிகாரி, காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஏசிபி ஆகியோர் தங்க ளது சட்டப்பூர்வ கடமைகளைச் செய்ய தவறியது தெளிவாகத் தெரிகிறது” என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.</p>
