பாஜக ஆளும் தில்லியில் ரூ.700 கோடி மருத்துவ ஊழல்
2 Jul 2026, 9:37 pm

பாஜக ஆளும் தில்லியில் ரூ.700 கோடி மருத்துவ ஊழல்

தில்லியில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. முதலமைச்ச ராக ரேகா குப்தா உள்ளார்.

இந்நிலையில், தில்லியில் அரசு மருத் துவமனைகளுக்கு மருந்துகள், மருத் துவ உபகரணங்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் வாங்கியதில் பெரும் முறை கேடுகள் அரங்கேறியுள்ளதாக கூறப் பட்டு வரும் நிலையில், இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த ஊழலால் அரசுக்கு ஏற் பட்டுள்ள துல்லியமான நிதி இழப்பு எவ்வ ளவு என்பது குறித்து இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை. எனினும் சுமார் ரூ. 650 கோடி முதல் ரூ. 700 கோடி மதிப்பிலான நிதி இழப்பு ஏற்பட்டு இருக்க லாம் என தகவல் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த மருத்துவ ஊழல் ரூ.1,000 கோடியை தாண்டும் என ஊழல் தடுப்புப் பிரிவு உண்மையயை ஒப்புக்கொண் டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன.

இந்த பெரும் ஊழல் வழக்கு தொ டர்பாக டாக்டர் வத்சலா அகர்வால் (முன் னாள் சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல்), நீரஜ் சோப்ரா (மத்திய கொள்முதல் முகமையின் முன்னாள் கணக்குத் துணைத் தலைவர்) என இரண்டு மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.

தில்லியில் பாஜக ஆட்சி அமைத்து 2 வருடம் கூட ஆகாத சூழலில், ரூ. 700 கோடி மதிப்பிலான மருத்துவ ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.