தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தெர்மோமீட்டரை உடைத்தால் காய்ச்சல் தீருமா?

12 Nov 2026, 9:01 pm
தெர்மோமீட்டரை உடைத்தால் காய்ச்சல் தீருமா?

தெர்மோமீட்டரை உடைத்தால் காய்ச்சல் தீருமா?

துருக்கியின் அன்டால்யாவில் ஐ.நா.-வின் 31-வது காலநிலை மாற்ற மாநாடு துவங்கியுள்ள வேளையில், இந்தியத் தலைநகர் நச்சுக் காற்றால் மூச்சுவிடத் திணறுகிறது.

நவம்பர் 8 தீபாவளி இரவு, தில்லியின் காற்றில் கலந்திருந்த நுண்ணிய நச்சுத் துகள்களின் அளவு, உலக சுகாதார நிறுவனத்தின் பாதுகாப்பான வரம்பை விட சுமார் 250 மடங்கு அதிகரித்தது. ஆனால், மக்களைக் காக்க வேண்டியமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், “எங்கள் கருவிகளால் 1,000-க்கு மேல் அளவிட முடியாது; எனவே அந்தத் தரவுகளை நீக்கிவிட்டோம்” எனக் கைவிரித்துவிட்டது. ‘எரிசக்தி மற்றும்தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையத்தின்’ (சிஆர்இஏ) அறிக்கையின்படி, இவ்வாறு 18 சதவிகித தரவுகள்திட்டமிட்டுத்தவிர்க்கப்பட்டதால், தில்லியின் உண்மையானமாசு அளவு 49 சதவிகிதம் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது. நோயைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, தெர்மோமீட்டரை உடைக்கும் இந்தப்போக்கு பொறுப்பற்ற செயலன்றி வேறென்ன?

இந்திய நகரங்கள் ஆண்டுதோறும் நச்சுக்கூடங்களாக மாறுவதற்கு வைக்கோல் எரிப்போ, பட்டாசுகளோ மட்டுமே காரணமல்ல; கார்ப்பரேட்லாபத்திற்காகச் சுற்றுச்சூழல் விதிகளை அரசு நீர்த்துப் போகச் செய்வதே முக்கியக்காரணமாகும்.

காற்று மாசுவில் 15 சதவிகிதம் பங்களிக்கும் நிலக்கரி அனல்மின் நிலையங்கள், சல்பர் டை ஆக்சைடு நச்சுப் புகையைக் கட்டுப்படுத்தும் கருவிகளைப் பொருத்த வேண்டும் என்பது விதி. ஆனால், “செலவு அதிகமாகிறது” என

நிறுவனங்கள் முறையிட்டதால், 78 சதவிகிதஆலைகளுக்கு ஒன்றிய அரசு விலக்கு அளித்துள்ளது. தில்லியைச் சுற்றி 300 கி.மீ. சுற்றளவில் உள்ள இந்த ஆலைகளிலிருந்தே 81 சதவிகித கந்தக டை ஆக்சைடுவெளியாவதாக சிஆர்இஏ எச்சரிக்கிறது. இந்த விலக்கால் மின்கட்டணம் யூனிட்டுக்கு 25-30 பைசா குறையும் என அரசு வாதிடுகிறது. ஆனால், அந்த 30 பைசா சேமிப்பின்மறுபக்கம் மருத்துவமனைக் கட்டணமாகவும், பறிபோகும் உயிர்களாகவும் சாமானிய மக்கள் தலையில்விழுகிறது. லாபம் தனியார் கணக்கிலும், இழப்பு பொதுமக்களின் நுரையீரலிலும் சேர்கிறது.

ஒன்றிய அரசு ஒருபுறம் ‘பசுமை எரிசக்தி’ எனப் பேசிக்கொண்டே, மறுபுறம் ஒடிசா முதல்சத்தீஸ்கர் வரை பழங்குடியினரின் காடுகளை அழித்து புதிய நிலக்கரிச் சுரங்கங்களைத் திறக்கப் பெரும் தொழில் குழுமங்களுக்கு அனுமதி வழங்குகிறது. 2025-ம் நிதியாண்டிலும் தூய்மை ஆற்றலுக்கு 10 சதவிகிதம் மட்டுமேமானியம் ஒதுக்கப்பட்டு, புதைபடிவ எரிபொருள்களுக்கு மூன்று மடங்கு அதிக மானியம் வழங்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திச்செலவைக் குறைக்கக் காற்றை மாசுபடுத்துவதை அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும்.பசுமை ஆற்றலை ஊக்குவிப்பதோடு, இந்தமாற்றத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையுமற்ற நேரடிப் பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.