ஓய்வூதிய தொகையை வழங்க இழுத்தடிப்பு
17 Feb 2026, 3:36 pm
<p><strong>ஓய்வூதிய தொகையை வழங்க இழுத்தடிப்பு</strong></p>
<p>கோவை, பிப்.17- மூன்று மாத ஓய்வூதிய தொகையை வழங்கக் கோரி நல வாரியம் அலுவலகம் முன்பு சிஐடியு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வெள்ளிக் கிழமைக்குள் நிலுவை தொகையை வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்த னர். தமிழக அரசின் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்துள்ள ஓய்வுபெற்ற கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழி லாளர்களுக்கு, கடந்த மூன்று மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் சிரமத் திற்கு உள்ளான தொழிலாளர்கள், நிலுவை யில் உள்ள ஓய்வூதியத் தொகையை உடனடி யாக வழங்கக் கோரி கோவை ராமநாதபு ரத்தில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு செவ்வாயன்று சிஐடியு சார்பில் காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு சிஐடியு மாவட் டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொரு ளாளர் ஆர்.வேலுசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட துணைத் தலை வர்கள் என்.ஜாகீர், இ.எம்.ராஜகோபால், மாவட்ட துணைச் செயலாளர் நவநீத கிருஷ்ணன், சிமெண்ட் மற்றும் பொது தொழி லாளர் சங்க பொதுச் செயலாளர் எம்.பஞ் சலிங்கம், தங்க நகை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சந்திரன் உள்ளிட்ட பல் வேறு சங்கங்களின் நிர்வாகிகளும், ஓய்வூதி யதாரர்களும் திரளாகப் பங்கேற்று முழக்கங் களை எழுப்பினர். போராட்டத்தைத் தொடர்ந்து தொழிலா ளர் உதவி ஆணையாளர், சிஐடியு நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப் போது, நிலுவையில் உள்ள மூன்று மாத ஓய்வூதிய தொகையும் வரும் வெள்ளிக் கிழமைக்குள் (பிப். 20) பயனாளிகளின் வங்கித் கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதிகாரி களின் இந்த உறுதியை ஏற்று, காத்திருப்புப் போராட்டத்தைத் தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக சிஐடியு நிர்வாகிகள் அறிவித்த னர். குறித்த காலத்திற்குள் பணம் வழங்கப் படாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.</p>
