புதிய குடும்ப அட்டை கிடைப்பதில் கால தாமதம்: திருப்பூர் மாவட்டத்தில் விண்ணப்பதாரர்கள் தவிப்பு
16 Feb 2026, 2:37 pm
<p><strong>புதிய குடும்ப அட்டை கிடைப்பதில் கால தாமதம்: திருப்பூர் மாவட்டத்தில் விண்ணப்பதாரர்கள் தவிப்பு</strong></p>
<p>திருப்பூர், பிப். 16 - திருப்பூரில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நான்கு மாதங்க ளுக்கு மேலாக குடும்ப அட்டை தரப்பட வில்லை என்று பொதுமக்கள் புகார் கூறு கின்றனர். தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தால் அவர்களது விண்ணப்பங் களை சரி பார்த்து இரண்டு மாதங்களில் (60 நாட்கள்) புதிய குடும்ப அட்டை வழங்கப்ப டும் என்று அரசு அறிவித்துள்ளது. எனினும் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் விண்ணப்பித்தவர்களுக்கு, நான்கு மாதங்க ளாகியும் புதிய குடும்ப அட்டைகள் தரப்பட வில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியர கத்திலும் புகார்கள் கூறப்பட்டுள்ளன. மேலும் புதிதாக விண்ணப்பித்தோரின் மனுக்கள் அதி களவு நிராகரிக்கப்படுகின்றன என்றும் புகார் கூறப்படுகிறது. சமையல் எரிவாயு இணைப்பு வைத்தி ருந்தால்தான் புதிய குடும்ப அட்டை தரப்படும் எனச் சொல்லி நிராகரிக்கப்படுவ தாக பாதிக்கப்பட்டோர் கூறினர். அத்துடன் புதிய அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடும் கிடையாது என்று மறுக்கப்படு வதாக தெரிவித்தனர். இது குறித்து குடிமைப் பொருள் துறை யில் பணியாற்றும் விற்பனையாளர்களிடம் கேட்டபோது, கடந்த அக்டோபர் மாதம் வரை விண்ணப்பித்தோருக்கு புதிய குடும்ப அட் டைகள் தரப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு நவம்பர் மாதத்தில் இருந்து புதிய குடும்ப அட் டைகள் தரப்படவில்லை என்று தெரிவித்த னர். புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. அந்த அட்டைகள் வந்த பிறகு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்று தெரி வித்தனர். புதிய குடும்ப அட்டை கிடைக்காதது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, நவம்பர் மாதம் வரை விண்ணப் பங்கள் சரி பார்க்கப்பட்டு குடும்ப அட்டை கள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. தற்போது டிசம்பர், ஜனவரி மாத விண்ணப்பங்களும் சரி பார்க்கப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பப்பட் டுள்ளன. புதிய குடும்ப அட்டைகள் அச்சிடப் பட்டு வந்தபிறகு பயனாளிகளுக்கு வழங்கப் படும் என்று தெரிவித்தார். திருப்பூரில் மட்டு மின்றி தமிழகம் முழுவதும் இந்த நிலை உள்ளது, எனினும் தேர்தல் அறிவிப்பு வருவ தற்கு முன்னதாக நிலுவையில் உள்ள விண் ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு தகுதியுள்ளோ ருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டு விடும் என்று அவர் கூறினார். தனி சமையல் எரிவாயு இணைப்பு இல்லை என்ற காரணத்தால் புதிய விண்ணப் பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் வரு வதைப் பற்றி கேட்டபோது, அது ஏற்கெனவே இருக்கும் விதிமுறைதான். தனிக் குடும்பம் என்றால் தனி சமையல் எரிவாயு இணைப்பு இருக்கும் என்ற அடிப்படையில் இதை ஓர் அடிப்படை அம்சமாகக் சேர்க்கப்பட்டுள்ளது என்றார். அதேசமயம் நியாவிலைக் கடை விற்பனையாளரிடம் இது குறித்துக் கேட்ட போது, கடந்த காலத்தில் பெற்றோர் அல்லது கூட்டுக் குடும்பத்தின் சமையல் எரிவாயு இணைப்பை சான்றாகக் காட்டினாலும் ஏற்றுக் கொண்டு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தனி எரிவாயு இணைப்பு இருக்க வேண்டும் என அந்த விதிமுறை கண்டிப்பான முறை யில் அமலாக்கப்படுகிறது. அத்துடன் ஆதார் முகவரியும் சரியாக இருக்க வேண்டும். அப் போதுதான் புதிய குடும்ப அட்டை கிடைக் கிறது என தெரிவித்தார்.</p>
