சங்கப் பதிவில் இழுத்தடிப்பு: பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள்!
19 Jan 2026, 2:23 pm
<p><strong>சங்கப் பதிவில் இழுத்தடிப்பு: பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள்!</strong></p>
<p>கோவை, ஜன. 19- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பை பதிவு செய்யாமல், தேவையற்ற காரணங்களைக் கூறி அலைக்கழிக்கும் பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகளை கண்டித்து, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழி யர்கள் திங்களன்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிரடி காத்திருப் புப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற் றோர் நல அமைப்பு’ உருவாக்கப் பட்டது. இந்தச் சங்கத்தைப் பதிவு செய்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், விண்ணப்பித்து ஐந்து மாதங்கள் கடந்த நிலையிலும், அதிகாரிகள் சங்கத்தைப் பதிவு செய்யாமல் தொடர்ந்து அலைகழித்து வருவ தாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்போராட்டத் திற்கு தலைமையேற்ற, சங்கத்தின் பொதுச்செயலாளர் அருணகிரி நாதன் செய்தியாளர்களிடம் கூறு கையில், “சங்கப் பதிவிற்காக ஆகஸ்ட் இறுதியில் விண்ணப்பித் தோம். அதிகாரிகள் கேட்ட அனைத்து திருத்தங்களையும் முறையாகச் செய்து கொடுத் தோம். ஆனால், போக்குவரத்து நிர் வாகத்திடம் இருந்து ‘தடை யின்மை சான்று’ பெற்றுத் தருமாறு கேட்கிறார்கள். ஓய்வுபெற்ற ஊழி யர்கள் சங்கம் அமைப்பதற்கு நிர் வாகத்தின் அனுமதி எதற்கு? தமிழ கத்தின் பிற 17 மாவட்டங்களில் இல் லாத புதிய நடைமுறைகளை இங் குள்ள அதிகாரிகள் கட்டாயப் படுத்துகின்றனர். மேலும், சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆவணங்களை யும் சமர்ப்பிக்கச் சொல்கிறார்கள். சட்டப்படி 7 உறுப்பினர்கள் இருந் தாலே சங்கம் பதிவு செய்யப்பட வேண்டும். இவர்களின் இந்த அடா வடிப் போக்கு சட்டத்திற்குப் புறம் பானது. இதுகுறித்த விதிகளை கேட்டால் அதிகாரிகளிடம் பதில் இல்லை.” எனவே, அரசு விதிகளை போட்டிருந்தால் அதை காட்ட வேண்டும். இல்லையெனில் உடனே சங்கத்தை பதிவு செய்து தர வேண்டும் என்பதற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம் என் றார். முன்னதாக, காத்திருப்புப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன், விவசாய சங்கத் தலைவர் செல்வராஜ், சங்கப் பொருளாளர் விஜயகுமார், சிஐடியு அரசு போக்குவரத்துக்கழக பொதுச் செயலாளர் வேளாங்கன்னிராஜ், சாமிநாதன் உள்ளிட்ட திரளான ஓய்வுபெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கை தமிழகம் முழுவதும் பின்பற்றப் படும் நடைமுறைகளையே இங் கும் பின்பற்ற வேண்டும் என்றும், அதிகார வரம்பிற்குட்பட்ட இந்தப் பதிவை உடனடியாக முடித் துத் தர வேண்டும். கோரிக்கை கள் நிறைவேறும் வரை போராட் டத்தை கைவிடப் போவதில்லை என பத்திரப்பதிவு அலுவலகத்தில் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.</p>
