வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி டேராடூன் டிக்சன் டெக்னாலஜிஸ் ஆலை
18 Jun 2026, 11:06 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி டேராடூன் டிக்சன் டெக்னாலஜிஸ் ஆலை தொழிலாளர்களின் வீரமிக்க போராட்டம்

“வெளி மாநிலச் சதி” என்ற காவல்துறையின் ஜோடனை தகர்ப்பு

வேலைநிறுத்தம் 62

டேராடூன், ஜூன் 18 - “தோழர்களே, நீங்களே சிந்தித்துப் பாருங்கள் — இந்த அதீத விலைவாசி உயர்வு காலத்தில் வெறும் 13,000 ரூபாயை வைத்துக் கொண்டு எப்படி ஒரு குடும்பத்தை நடத்த முடியும்? இந்த ‘மில்டன்’ வாட்டர் பாட்டில்களையும், டிஃபன் பாக்ஸ்களையும் தயாரிப்பதற்காக நாங்கள் இரவும் பகலும் 10 மணி நேரம் தொடர்ந்து கால்கடுக்க நின்று இயந்திரங்களை இயக்குகிறோம். எங்கள் இரத்தம் அப்பட்டமாக உறிஞ்சப்படுகிறது. கூடுதல் வேலை செய்ய கட்டாயப்படுத்து கிறார்கள், ஆனால் அதற்கான சரியான ஊதியம் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை. பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ என்று ஒவ்வொரு மாதமும் பணத்தைப் பிடிக்கும் ஒப்பந்த தாரர்கள், நாங்கள் நோய்வாய்ப்படும் போது காப்பீட்டு அட்டைகள் வேலை செய்யாதவாறு ஏமாற்றுகிறார்கள். நொய்டா தொழிலாளர்கள் போராடித் தங்களின் உரிமைகளைப் பெறும் போது, உத்தரகண்ட் தொழிலாளர்கள் மட்டும் ஏன் ஒடுக்கப்பட வேண்டும்? தோழர்களே கொந்தளித்து எழுங்கள்!” — உத்தரகண்ட் மாநிலம் டேராடூ னின் செலாகுய் (Selaqui) தொழில் மண்ட லத்தில் உள்ள ‘டிக்சன் டெக்னாலஜிஸ்’ (Dixon Technologies) ஆலை வாயிலில் தொழி லாளர்கள் எழுப்பிய வர்க்கக் குரல் இதுவாகும். இப்போராட்டத்தை ஒடுக்க நினைத்த பாசிச அரசு இயந்திரமும் காவல்துறையும், இது உள்ளூர் தொழிலாளர்களின் தன்னிச்சையான போராட்டம் அல்ல என்றும், நொய்டா தொழிலாளர் எழுச்சி யோடு தொடர்புடைய “வெளி மாநிலச் சதித் திட்டம்” என்றும் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தொழிலாளர்களின் மொபைல் போன்களைப் பறிமுதல் செய்து தடயவியல் சோத னை நடத்தியதில் இந்த ‘பயங்கரவாதச் சதி’ அம்பல மாகிவிட்டதாகக் காவல்துறை கூச்சலிடுகிறது.

நொய்டா விளைவும் உளவுத்துறையின் போலிப் பட்டியல்களும்

நொய்டாவில் 45,000 தொழிலாளர் களைத் திரட்டிய அதே போராட்ட உத்தி இங்கும் வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் போஸ்டர்கள் மூலம் பரப்பப்பட்டதாகக் காவல்துறை குற்றம் சாட்டுகிறது. நொய்டாவில் ‘மஸ்தூர் பிகுல்’ (Mazdoor Bigul) என்ற அமைப்பு செயல்பட்டதைப் போல, செலாகுய் பகுதியில் ‘முக்தி சங்கிராம்’ (Mukti Sangram) என்ற தீவிர இடதுசாரி அமைப்பு ஒப்பந்தத் தொழிலாளர் குடியிருப்பு களுக்குள் ஊடுருவிப் புரட்சியைத் தூண்டியதாக அரசுத் தரப்பு அலறுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி யுள்ள சங்கம் அமைக்கும் கூட்டு உரிமை யின்படி, தொழிலாளர்கள் தங்களுக்குள் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குவதும், பிற மாநிலத் தொழிலாளர்களுடன் வர்க்க ஒருமைப்பாட்டைக் கொண்டிருப்பதும் எங்ஙனம் குற்றமாகும்? பிரிட்டிஷ் கால னித்துவ ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் தலைவர்களை வேட்டையாடிய அதே பாசிச உத்தியை, தற்போதைய புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் கீழ் காவி-கார்ப்பரேட் அரசு இயந்திரம் மீண்டும் அரங்கேற்றி வருகிறது.

டிக்சன் ஆலையும் வெடித்த வர்க்கக் கொந்தளிப்பும்

இந்தியாவின் மிகப்பெரிய மின்னணு உற்பத்தி சேவை (EMS) நிறுவனமான ‘டிக்சன் டெக்னாலஜிஸ்’, டேராடூன் மாவட்டத்தில் மட்டும் 8 மெகா உற்பத்தி அலகுகளைக் கொண்டு, ஆண்டுக்கு 24 லட்சம் வாஷிங் மெஷின்களைத் தயாரிக்கும் கார்ப்பரேட் அரக்கனாக விளங்கி வருகிறது. இங்குள்ள 5,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் வெளி முகமை கள் மூலம் உறிஞ்சப்படும் ஒப்பந்தத் தொழி லாளர்கள் ஆவர். நொய்டாவில் டிக்சன் ஆலைத் தொழி லாளர்கள் நடத்திய ஊதியப் போராட்டத்தின் வெற்றி, இம்மாநிலத் தொழிலாளர்களிடம் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், மே 15 அன்று உத்தரகண்ட் அரசு அறிவித்த ₹518 என்ற அற்ப அகவிலைப்படி உயர்வு தொழிலாளர்களின் வர்க்கக் கோபத்தைக் கிளறியது. இதனால், மே 15 அன்று மாலையே டிக்சன், லைட்டெனியம் டெக்னாலஜி மற்றும் குளோபல் மெடிகோஸ் ஆகிய ஆலைகளின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அசெம்பிளி லைன்களைப் புறக்கணித்து அதிரடி வேலைநிறுத்தத்தில் குதித்தனர்.

நெடுஞ்சாலை முற்றுகையும் பாசிச ‘ஆபரேஷன் பிரஹாரும்’

மே 16 அன்று காலை 7 மணிக்கே 1,600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு, ‘டேராடூன் - சக்ராதா தேசிய நெடுஞ்சா லையை’ முற்றுகையிட்டுப் பிரம்மாண்ட சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். போக்குவரத்து முற்றிலும் முடங்கிய தால் நிலைதடுமாறிய காவல்துறை, தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டித் தனமான லத்தி சார்ஜ் நடத்தியது. இதற்கு எதிராகத் தொழிலாளர்கள் தரப்பிலிருந்து கல்வீச்சுகளும் வெடித்தன. இதனைத் தொடர்ந்து, மே 17 அன்று மாவட்ட நிர்வாகம் பாரதீய நகரிக் சுரக்சா சன்ஹிதாவின் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு (பழைய 144) பிறப்பித்தது. மே 18 அன்று ‘ஆபரேஷன் பிரஹார்’ (Operation Prahar) என்ற பெயரில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு, தொழிலாளர் குடியிருப்புகள் நரவேட்டையாடப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட ‘அடையாளம் தெரியாத தொழிலா ளர்கள்’ மீது உளவுத்துறை ட்ரோன் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்துக் கொடூரமான பிரிவுகளில் பொய் வழக்கு களைப் பதிவு செய்தது. புலம்பெயர் தொழி லாளர்களின் பாஸ்போர்ட் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளை முடக்குவோம் என்ற பாசிச மிரட்டல்கள் காரணமாக, மே 22 அன்று தொழிலாளர்கள் படிப்படியாக வேலைக்குத் திரும்ப வேண்டிய சூழல் உருவானது.

வென்றெடுக்கப்பட்ட ஊதியப் பலன்களும் தொடரும் எச்சரிக்கையும்

பாசிச அடக்குமுறைகள் மூலம் தொழிலாளர்களைத் தற்காலிகமாகப் பணிக்குத் திரும்ப வைத்த போதிலும், தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் கார்ப்பரேட் நிர்வாகம் பணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எட்டப்பட்ட முத்தரப்பு உடன்பாட்டின் பயன்கள்:

• திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தின் கீழ், தொழிலாளர்களின் அடிப்படை மாதச் சம்பளம் ₹13,057 முதல் ₹14,541 ஆக உறுதி செய்யப்பட்டது.

• அதுவரை ஆலை நிர்வாகத்தால் திருடப்பட்டு வந்த மாறுபடும் அக விலைப்படி நிலுவைத் தொகைகள் அனைத்தையும் 10 நாட்களுக்குள் தொழி லாளர்களின் கணக்கில் செலுத்த தொழி லாளர் துறை உத்தரவிட்டது.

• கள்ளச் சந்தை ஒப்பந்ததாரர்களின் ஊதிய கொள்ளையைத் தடுக்கவும், கூடுதல் வேலைக்கான முறையான கணக்கு களைக் கண்காணிக்கவும் ஆலைக்குள் ‘உள் குறைகேட்புக் குழுக்கள்’ (Grievance Redressal Committees) அமைக்க உடன்பாடு எட்டப்பட்டது.

கார்ப்பரேட்-அரசு நச்சுக்கூட்டணியின் அடக்குமுறைகளையும் மீறி, டிக்சன் ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் வர்க்க ஒருமைப்பாட்டின் மூலம் வென்றெடுத்துள்ள இந்த ஊதியப் பலன்கள், உத்தரகண்ட் தொழில் வழித்தடத்தில் கார்ப்பரேட் அராஜகத்திற்கு எதிராக விழுந்த பலமான வர்க்க அடியாகும். தி லெப்ட் வியூஸ்