தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“காடுகள் அழிப்பே டெங்கு பரவலுக்கு முக்கிய காரணம்!”

2 hours before
“காடுகள் அழிப்பே டெங்கு பரவலுக்கு முக்கிய காரணம்!”

“காடுகள் அழிப்பே டெங்கு பரவலுக்கு முக்கிய காரணம்!”

சென்னை, நவ.3–டெங்கு உள்ளிட்ட தொற்றுகள் தாக்குவதற்கு முதலாளித்துவ லாப வேட்டைக்காகக் காடுகள் அழிக்கப்படுவதே மையமான காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.உலக சூழலியல் நாளாகிய (நவ.1) ஞாயிறன்று ‘சூழல் உடல் உயிர்’ என்ற கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. மருத்துவர் கோபிகர் ஹோமியோபதி அறக்கட்டளை அதனை நடத்தியது.சிறப்புரையாற்றிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி.சுந்தரராஜன், “கொசுக்கள் நீர் நிலைகளில் முட்டையிடுகிறபோது, அவற்றின் பெரும்பாலான லார்வாக்களைத் தவளைகளின் தலைப்பிரட்டைகள் உணவாக உட்கொள்ளும்.காடுகள் அழிக்கப்பட்டு நீர்நிலைகள் கான்கிரீட் காடுகளாக மாற்றப்பட்டதால், தவளைகளோ தலைப்பிரட்டைகளோ இல்லாத தேங்கிய குட்டைகளில் கொசுக்கள் முட்டையிடுகின்றன. கொசுத்தொகை அதிகரித்து நோய்கள் பரவுகின்றன,” என்றார்.

உலகளாவிய சூழலியல் சீர்கேட்டில் பங்கில்லாத நேபாளம் போன்ற நாடுகளும், கேரளம் உள்ளிட்டபகுதிகளின் மக்களும் அதற்கு விலை கொடுக்கநேரிடுகிறது. காடுகள் அழிப்பால்தான் காட்டுவிலங்குகளுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த நோய்கள் இன்று மனிதர்களையும் தொற்றுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

குன்னூர், ஊட்டி போன்றகுளிர்ப்பகுதிகளில் வெப்பமண்டலப் பறவைகளான மயில்கள் காணப்படுவது, புவிவெப்பம் அதிகரிப்பதன் அறிகுறிதான் என்றார் அவர்.அறக்கட்டளை அறங்காவலர் மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன், “பூமி சமுதாயத்தில் சிலருக்கு மட்டும்சொந்தமானதல்ல. இதைவிடச் சிறப்பாக அதை அடுத்த தலைமுறைகளுக்கு விட்டுச்செல்வது மனிதகுலத்தின் கடமை” என்று கார்ல் மார்க்ஸ் எழுதியிருப்பதை நினைவுகூர்ந்தார்.

“சூழலியல் சீர்கேட்டிற்கு மனிதர்களின் பேராசைதான் காரணம் என்று பொத்தாம்பொதுவாகப் பேசப்படுகிறது. ஆனால், உலகப்பெரும் முதலாளிகளும் அவர்களுக்குத் தொண்டாற்றும் அரசுகளும்தான் மிக முக்கியமான காரணம்,” என்று அவர் கூறினார்.கம்யூனிகேர் அமைப்பின் தலைவரும் பேச்சு நோயியல் வல்லுநருமான மருத்துவர் அமுது சங்கர், “குழந்தைகள் மொபைல் போன் திரைகளில் மூழ்கிவிடுவதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டியதில்லை. ஆனால் முறைப்படுத்தலாம்.” என்றார். கைப்பேசிக்குத் தடை போடுவதற்கு மாறாக, வீட்டுப் பணிகளில் குழந்தைகளுடன் பேசிக்

கொண்டே அவர்களையும் ஈடுபடுத்துவது நல்ல பலனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்திய ஹோமியோபதி மருத்துவக் குழுமத்தின் தமிழ்நாடு பிரிவு தலைவர்மருத்துவர் க. பாலமுருகன்,“பல்லுயிர்ப் பெருக்கத் தன்மையைப் பாதுகாக்கத் தவறியதால் உலக சூழலியல் திறன் குறியீட்டில் இந்தியா 176வது இடத்திற்குப் போக நேர்ந்துள்ளது,” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.