நவீன பாசிசத்தின் வரையறை - பேரா. பிரபாத் பட்நாயக்
30 Oct 2026, 8:51 pm

நவீன பாசிசத்தின் வரையறை - பேரா. பிரபாத் பட்நாயக்

பாசிசத்தை எதிர்க்க ஐக்கிய முன்னணி உத்தியை முன்வைத்தவர், கம்யூ னிஸ்ட் அகிலத்தின் ஏழாவது காங்கிரசுக்குத் தலைமை வகித்த பல்கேரியக் கம்யூனிஸ்ட் தலைவர் ஜார்ஜி டிமிட்ரோவ். 1933இல் நாஜிகள் ஆட்சியைக் கைப்பற்றிய பின், ஜெர்மன் நாடாளுமன்றமான ரீச்ஸ்டாக்கிற்குத் தீ வைத்ததாகக் கூறப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். நீதிமன்றம் ஏற்பாடு செய்ய முன்வந்த வழக்கறிஞரை மறுத்து, தமக்காகத் தாமே வாதாடினார். ஹிட்லருக்கு அடுத்த சக்திவாய்ந்த தலைவரான ஹெர்மன் கோரிங்கை நீதிமன்றத்துக்கு வரவழைத்துக் குறுக்கு விசாரணை செய்ய அவர் கோரினார்; நீதிமன்றம் ஏற்றது. அடுக்கடுக்கான கேள்விகளால் ஆத்திரமடைந்த கோரிங், “கயவனே, உன்னைத் தூக்கில் தொங்கவிட வேண்டும்” எனக் கூச்சலிட்டார். வழக்கின் போலித் தனத்தை டிமிட்ரோவ் அறிவுக்கூர்மையுடன் அம்பலப்படுத்தினார்; நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

இதற்கு நேர்மாறானது இந்திய நீதித்துறையின் அணுகுமுறை. ஆறு ஆண்டுகளுக்கு மேலாகச்

சிறையில் வாடும் இளைஞர்கள் மீது விசாரணையேதொடங்கவில்லை; பிணையும் மறுக்கப்படுகிறது. ஒரு சாதாரணக் கைதி அமித் ஷாவை நீதிமன்றத் துக்கு வரவழைத்துக் குறுக்கு விசாரணை செய்வதைகற்பனைகூடச் செய்ய முடியாது. டொனால்டு டிரம்ப்பின் ‘காப்பு வரிகள்’ அரசியல் சட்டத்தை மீறுவதாக அமெரிக்க நீதிமன்றம் அண்மையில் துணிச்சலாகத் தீர்ப்பளித்தது; ஆத்திரமடைந்த டிரம்ப்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெர்மனியில் மக்களாட்சி தொடங்கி 15 ஆண்டுகளிலேயே அத்தகைய நீதிமன்றம் இருந்தது. இந்திய அரசியல் சட்டம் உருவாகி 75 ஆண்டுகள் ஆகியும், நம் நீதித்துறை அதிகார வர்க்கத்தின் முன் ஏன் சாஷ்டாங்கமாக விழுகிறது?

பாசிசத்தின் பொதுத் தன்மைகள்

பாசிசமும் நவ பாசிசமும் ஏகபோக மூலதனத்துக்கும் புதிதாக உருவெடுத்த பாசிச சக்திகளுக்கும் இடையிலான கூட்டணி. ஏகபோக மூலதனம் அமைப்பு ரீதியானநெருக்கடியைச் சந்தித்து, அதன் சட்டப்பூர்வத் தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது இந்தக் கூட்டணிஉருவாகிறது. ஏகபோக மூலதனத்தின் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதில் அதற்குப் பங்குண்டு. ராணுவச்செலவை பெருமளவு உயர்த்தி,போருக்குத் தயாரிக்கும் கொடூர வழிகளில் வேலையின்மைக்கு அது தீர்வுகண்டது. தீவிர அடக்குமுறை, ஏகபோக மூலதனத்துடன் நெருக்கம், ஒரு தலைவரை முன்னிறுத்துதல், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு ஆகியவை இதன்பொதுத் தன்மைகள்; குறிப்பிட்ட குணாம்சங்கள் நாட்டுக்கு நாடு மாறுகின்றன. ஐரோப்பாவில் கறுப்பினமக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகவும், இந்தியாவில் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகவும்வெறுப்பு வளர்க்கப்படுகிறது. இவர்கள் புலம்பெயர்ந்தோர் அல்லர்; ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கேயேவாழ்பவர்கள்.

சாதியப் படிநிலையும் உரிமைகளும்

பாசிசம் மத்தியகாலத் தப்பெண்ணங்களைப் பயன்படுத்துகிறது. குறிப்பிட்ட சாதியினரை அடித்தட்டில் வைக்கும் படிநிலையே இந்திய நவ பாசிசம் கையாளும் பாரபட்சம். அதன் கோபம் முஸ்லிம்கள் மீது; ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள், சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்ப மதம் மாறிய அடித்தட்டு மக்களே. சாதிய அசமத்துவத்தின் தொடர்ச்சியாக, தனிநபர் உரிமைகளையும் நவ பாசிசம் மதிப்பதில்லை.

எல்லா நிலப்பிரபுத்துவ சமூகங்களும் மனிதர்களிடையே உள்ளார்ந்த அசமத்துவம் இருப்பதாக அனுமானித்தவையே. எனவே நீதித்துறையின் இந்தப் பணிவை வெறும் நிலப்பிரபுத்துவ எச்சம் என்று மட்டும் விளக்கிவிட முடியாது. மேற்கு நாடுகளில் முதலாளித்துவப் புரட்சிகள் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் மீது முழுமையான தாக்குதல் தொடுத்தன;இங்கிலாந்திலும் பிரான்சிலும் அரசர்களே தண்டிக்கப்பட்டனர். தனிநபர் சமத்துவம், உரிமைகள் குறித்த நம்பிக்கை அங்கு உயர்தட்டினரிடையேபரவியது. இந்திய உயர்தட்டினரிடம் அத்தகைய கருத்துகள் வேரூன்றவில்லை. ஆகவே, அரசியல் சட்டம் வழங்கிய உரிமைகளை நீதித்துறைபாதுகாக்காவிட்டால் அவை பறிக்கப்படுகின்றன. உரிமைகளைச் சுருக்குவதே நவ பாசிச ஆட்சியின் விருப்பம்.

பறிக்கப்படும் உரிமைகள்

இரண்டு அண்மை நிகழ்வுகளைப் பார்ப்போம். நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலையை உறுதி செய்தது. அந்த உரிமை, எந்த விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பில் பறிக்கப்பட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் 13 கோடி வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறித்துள்ளார். இரண்டிலும் நீதித்துறை தலையிடவில்லை. அக்டோபர் 6 மேற்கு வங்க இடைத்தேர்தல்களில் வாக்குரிமை பறிப்பு குறித்த வழக்கை, இடைத்தேர்தல்தானே, அவசரமாக விசாரிக்கத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் ஒதுக்கியது. பிரிட்டனில் ஓர் இடைத்தேர்தல் முடிவு பிரதமரையே மாற்றியிருக்கிறது. வழங்கப் பட்டதில்திருப்தியடையுங்கள், உரிமை கோராதீர்கள் என்பதே இதன் உட்பொருள்.

ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டம்

இன்றைய இந்திய மக்களின் போராட்டம், அரசியல் சட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டம்; சாதியப் படிநிலை மனோபாவத்தைத் தகர்ப்பதும் அதில் அடங்கும். நீதித்துறையின் பாதகமான அணுகுமுறைகளை அப்படியேஏற்காமல், மரபுவழிப் படிநிலைச் சிந்தனையி லிருந்து அது உணர்வுப்பூர்வமாக விடுபட வேண்டியதன்அவசியத்தை உணர்த்துவதும் ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டத்தின் பகுதியே.பீப்பிள்ஸ் டெமாக்ரசி (அக்டோபர் 11) தமிழில் சுருக்கம் : ஆர். சிங்காரவேலு