4 தொழிலாளர் தொகுப்புகளை கண்டித்து பாதுகாப்புத் துறை ஊழியர்கள் பேரணி
28 Nov 2025, 2:28 pm
<p><strong>4 தொழிலாளர் தொகுப்புகளை கண்டித்து பாதுகாப்புத் துறை ஊழியர்கள் பேரணி</strong></p>
<p>அம்பத்தூர், நவ. 28- ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள புதிய 4 தொழிலாளர் தொகுப்புகளை கண்டித்து பாதுகாப்புத் துறை ஊழியர்கள் கூட்ட மைப்பு சார்பில் ஆவடியில் வெள்ளியன்று (நவ.28) பேரணி, ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதுகுறித்து அகில இந்திய பாது காப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார் கூறுகை யில், 100 ஆண்டுகளுக்கும் மேல் போராடிப் பெற்ற 29 தொழிலாளர் நல சட்டங்களை அழித்து இந்த 4 தொகுப்புகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இளைஞர்கள் மீது தாக்குதல் இத்தொகுப்புகள் அமல்படுத்தப் படுத்தும் போது இனிமேல் அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் நிரந்தர வேலை வாய்ப்பு என்பது வெறும் பகல் கனவாக மாறிவிடும். குறுகிய கால ஒப்பந்த அடிப்படையிலான வேலை சட்ட ரீதியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்திய நாட்டு இளைஞர்கள் மீதும், சமூக நீதி இட ஒதுக்கீட்டின் மீதும் தொடுக்கப் பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதல் ஆகும். தொழிலாளர்கள் மீது தாக்குதல் அதேபோல் தொழிற்சாலைகளின் வார வேலை நேரம் 48 மணி நேரத்திற்கு மேல் தொழிலாளர்கள் பணிபுரிந்தால் அவர்க ளுக்கு அவர்களுடைய ஊதியத்தின் இரட்டிப்புத் தொகையை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்ற சட்டத்தை மாற்றி கூடுதல் நேரத்திற்கான ஊதியம் கணக்கிடுகின்ற போது அடிப்படை ஊதியம் மற்றும் விலை வாசி உயர்வு படி மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும், மற்ற அலவன்சு கள் எவையும் கணக்கிடுவதற்கு எடுத்துக் கொள்ளப்படாது என தொழிலாளர்கள் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடுத்துள்ளது என்று அவர் கூறினார். இதில் முகமது மீரா (தொமுச), பால முருகன் (ஐஎன்டியுசி), சம்மேளன அமைப்புச் செயலாளர் கிருபானந்தம், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் க.விஜய சீலன், திண் ஊர்தி தொழிற்சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முரளிகுமார், தணிகை அரசு, இன்ஜின் தொழிலகத்தில் மோகன், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
