தொழிலாளி வர்க்கத்தின் எதிரிகளைத் தோற்கடிப்போம்
10 Apr 2026, 5:30 am

தொழிலாளி வர்க்கத்தின் எதிரிகளைத் தோற்கடிப்போம்

சிஐடியு பணியன் தொழிலாளர் சங்கம் தீர்மானம்

திருப்பூர், ஏப். 9- தமிழக சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் ஆதரவு பெற்ற மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது என சிஐடியு பணியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது.

திருப்பூர் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில், சங்கத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன் தலைமையில் பணியன் பொதுத் தொழிலாளர் சங்க கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், ஒன்றிய பாஜக அரசு, தொழிலாளர் நலன்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளைப் பிடிவாதமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான இந்தச் சட்டங்களை எதிர்த்து எந்தக் குரலும் எழும்பாமல், பாஜக விற்கு அடிபணிந்து அதிமுக செயல்படுகிறது. மேலும், உழைப்பாளி மக்களை அடிமைப்படுத்தி பிழைப்புத் தம் இருந்துதுவக் கொள்கைகளையும், கார்ப்பரேட் பொருளாதாரக் கொள்கைகளையும் தீவிரமாகப் பின்பற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடிப்பது காலத்தின் கட்டாயம்.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் திருப்பூர் தெற்கு மற்றும் அவிநாசி ஆகிய தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நவ-பாசிசப் போக்குடன் செயல்படும் இவர்களைத் தொழிலாளர்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும். நாட்டின் அரசியல் சாசன விழுமியங்களைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்கவும் தொடர்ந்து போராடும் இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தொழிலாளர்களைச் சங்கங் கேட்டுக்கொள்கிறது.

மேலும், பணியன் தொழிலாளர்களுக்கான புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் கடந்த மார்ச் 17 அன்று கையெழுத்தானது. ஆனால், திருப்பூரில் உள்ள பல நிறுவனங்கள் இன்னும் புதிய ஒப்பந்தப்படி சம்பள உயர்வை வழங்கவில்லை. எனவே, சம்பள உயர்வு வழங்காத நிறுவனங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் இயக்கங்களை முன்னெடுப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.