முந்தய பக்கம்

பாஜகவை வீழ்த்துவோம்: சிபிஎம் முடிவு

10 Apr 2026, 5:30 am
பாஜகவை வீழ்த்துவோம்: சிபிஎம் முடிவு

பாஜகவை வீழ்த்துவோம்: சிபிஎம் முடிவு

கோவை, ஏப். 9- கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது மற்றும் பாஜகவைத் தோற்கடிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, கோவை வடக்கு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “தேர்தல் சிறப்புப் பேரவை” கூட்டம் கணபதியில் உள்ள இளஞ்சிற்பி சங்க அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வடக்கு நகரக் குழுச் செயலாளர் என்.ராமமூணசாமி தலைமை வகித்தார். பேரூர் இடைக்குழுச் செயலாளர் ஜி.சாந்தாராம் அனைவரையும் வரவேற்றார்.

இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் சிறப்புரையாற்றினார். அப்போது, நாட்டின் ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாக்க பாஜக தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.முருகேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், கோவை வடக்குத் தொகுதியில் களமிறங்கியுள்ள மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக கட்சி உறுப்பினர் களும், வர்க்க வெகுஜன அமைப்பினரும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டுமென ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில், நகரக் குழு உறுப்பினர் நிசார் அகமது நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram