தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகளை ஏமாற்றும் மோடி அரசுடன் கைகோர்த்த அதிமுகவை முறியடிப்போம்!

10 Apr 2026, 5:30 am
விவசாயிகளை ஏமாற்றும் மோடி அரசுடன் கைகோர்த்த அதிமுகவை முறியடிப்போம்!

விவசாயிகளை ஏமாற்றும் மோடி அரசுடன் கைகோர்த்த அதிமுகவை முறியடிப்போம்!

கடந்த 11 ஆண்டுகளில், மோடி அரசு விவசாயிகளையும் விவசாயத்தை யும் மிக மோசமாகத் தாக்கி யுள்ளது. விவசாயிகளின் நலன்கள் என்பது வெறும் வெற்று கோஷங்களாகவும், நிறை வேற்றப்படாத வாக்குறுதிகளாகவும், வெறும் விளம்பரங்களாகவும் மட்டுமே சுருங்கிப் போய்விட்டன. விவசாயிகளின் துயரத்தை ஒரு வியாபாரமாகவே இந்த அரசு மாற்றி யுள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.

குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்பது இப்போது “விவசாயிகளுக்கு ஏற்படும் உச்ச பட்ச மோசடி” ஆகிவிட்டது.

பெயரளவுக்கான ஆதரவு விலை மோடி அரசு கோதுமை மற்றும் நெல்லைத் தவிர வேறு எந்தப் பயிரையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் முறையாக வாங்குவதில்லை. ஆதரவு விலையை அறி வித்துவிட்டு, விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்யவில்லை என்றால், அந்த அறிவிப்பில் என்ன பயன் இருக்கிறது? தாங்கள் மிக உயர்ந்த ஆதரவு விலையை வழங்குவதாகக் கூறி, அரசு செய்தித்தாள்க ளில் பக்கம்பக்கமாக விளம்பரங்களை வெளியிட்டுத் தற்பெருமை கொள்கிறது.

அதில், நெல்லின் விலை ரூ. 2,300-லிருந்து ரூ.2,369-ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாட்டின் இன்றைய பணவீக்க விகிதம் 6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு விலையான ரூ. 2,300-இல் 6 சதவீதம் என்பது ரூ. 138 ஆகும். எனவே, கடந்த ஆண்டு விலையின் மதிப்பையாவது விவசாயிகள் பெற வேண்டுமென்றால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 2,438 (2300+138) வழங் கப்பட வேண்டும். ஆனால் அரசு அறிவித் துள்ள விலையோ வெறும் ரூ. 2,369 மட்டுமே. இது பணவீக்க விகிதத்தைக்கூட ஈடுகட்டவில்லை.

புதிய விலைகளை அறி விப்பதாக நாடகமாடாமல், குறைந்தபட்சம் பணவீக்கத்திற்கு ஏற்பவாவது விலையை உயர்த்துவதே நியாயமானது. விவசாயிகளின் சுமையை அதிகரிக்கும் பட்ஜெட் ஒருபுறம் பணவீக்கம் விவசாயிகளை வாட்டுகிறது என்றால், மறுபுறம் டீசல், மின்சாரம் மற்றும் விதைகளின் விலையை அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. உரங்க ளுக்கான மானியத்தை இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 24,000 கோடி அளவுக்கு அரசு குறைத்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் ரூ. 1.88 லட்சம் கோடியாக இருந்த உர மானியம், 2024-25 பட் ஜெட்டில் ரூ. 1.64 லட்சம் கோடியாகக் குறைக் கப்பட்டுள்ளது. இந்த ரூ. 24,000 கோடி இழப்பையும் விவசாயிகள் தங்கள் சொந்தப் பாக்கெட்டிலிருந்துதான் ஈடுகட்ட வேண்டும்.

இது விவசாயிகளை மேலும் கடனாளிக ளாக்கும் செயலே அன்றி வேறல்ல. சட்டப்பூர்வ உத்தரவாதம் மறுப்பு குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறுவதை விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையாக மாற்ற வேண்டும் என்று நாடா ளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. 2024 டிசம்பர் 17 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலைக்குழுவின் 69-ஆவது அறிக்கையில், விவசாயிகளின் வருமானத்தை நிலைப்படுத்தவும், தற்கொ லைகளைத் தவிர்க்கவும் சட்டப்பூர்வ உத்தர வாதம் அவசியம் என வலியுறுத்தப் பட்டுள்ளது. ஆனால், மோடி அரசு இந்தப் பரிந்துரையைக் கண்டு கொள்ளாமல் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது. விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள், பவர் டில்லர்கள், அறுவடை இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்கள் மீதான ஜி.எஸ்.டி வரியைக் குறைக்கவோ அல்லது நீக்கவோ வேண்டும் என்று 2017 முதலே வேளாண் அமைச்சகம் கோரி வரு கிறது.

ஆனால், மோடி அரசு இதற்கும் செவி சாய்க்கவில்லை. உரங்களுக்கு 5 சதவீதம், பூச்சிக்கொல்லிகளுக்கு 18 சதவீதம், டிராக்டர்களுக்கு 12 சதவீதம் மற்றும் இதர உதிரிபாகங்களுக்கு 18 சதவீதம் என ஜி.எஸ்.டி வரி விதித்து விவசாயத்தை அழி வுப்பாதைக்கு இட்டுச் செல்கிறது. விவசாயிகளுக்கு எதிரான மோடி அரசு விவசாயம் தொடர்பான முக்கியத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 3 லட்சம் கோடி நிதி முறையாகச் செலவிடப்பட வில்லை. மோடி அரசின் அடிப்படை இயல்பே விவசாயிகளுக்கு எதிரானது என்பதற்கு இதுவே சான்று. குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்கும்போது மட்டும் அமைச்சரவையும் பாஜகவினரும் தங்க ளைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறார்கள், கைதட்டிக் கொள்கிறார்கள்.

ஆனால், உற் பத்தியாளர்களுக்கு இதனால் கிடைப்பதோ உச்சபட்சத் துன்பம் மட்டுமே. இந்திய நாட்டின் 70 கோடிக்கும் அதிக மான விவசாயிகளுக்கு எப்போது முறை யான குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும்? அவர்களின் பயிர்களுக்கான நியாயமான விலையை வழங்காமல் பொய்க ளையே மூலதனமாகக் கொண்டு அரசு செயல்படுகிறது. விவசாயிகளை ரத்தக் கண்ணீர் சிந்த வைக்கும் இந்த மோடி அர சுக்கு ஆதரவாகத்தான், அதிமுக கைகோர்த் துக் கொண்டு, தமிழகத் தேர்தல் களத்தில் உலா வருகிறது.அவர்களை முறியடிப்போம், விவசாயிகளே!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.