ராஜாராம் மோகன்ராய் மீதான அவதூறு கருத்து எங்களுக்கு சம்மந்தமில்லை ; ஓட்டம் பிடித்த பாஜக தலைமை
17 Nov 2025, 3:10 pm
<p><strong>ராஜாராம் மோகன்ராய் மீதான அவதூறு கருத்து எங்களுக்கு சம்மந்தமில்லை ; ஓட்டம் பிடித்த பாஜக தலைமை</strong></p>
<p>புதுதில்லி பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் உயர் ல்வித்துறை அமைச்சராக இருப்பவர் இந்தர் சிங் பர்மர். இவர் ஒரு நிகழ்ச்சியில், “சுதந்திரத்திற்கு முன்பு வங்கா ளத்திலும், அருகிலுள்ள பகுதிகளிலும் ஆங்கிலக் கல்வி மூலம் பழங்குடி மக்க ளின் நம்பிக்கையை மாற்ற ஒரு தீய முயற்சி நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலே யர்கள் பல இந்தியர்களை போலி சமூக சீர்திருத்தவா திகளாக மாற்றினர். அவர்க ளில் ராஜாராம் மோகன் ராய் ஒரு பிரிட்டிஷ் முகவராக தொடர்ந்து பணியாற்றிய வர்” என வரலாறு தெரியா மல் உளறினார். இவரது கருத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்ட னங்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக ராஜாராம் மோ கன்ராயின் பிறப்பிடமான மேற்கு வங்கத்தில் பாஜக விற்கு எதிராக போராட்ட பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்தர் சிங்கின் கருத்திற்கும் பாஜக விற்கும் சம்மந்தமில்லை என பாஜக தலைமை நழுவி யுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொ டர்பாளர் சிவம் சுக்லா கூறுகையில், “அமைச்சர் இந்தர் சிங் பர்மரின் கருத்து, அவரது தனிப்பட்டது கருத்து ஆகும். தேசத்திற்கு பங்களித்த அனைத்து சிறந்த தலைவர்களையும் பாஜக மதிக்கிறது. அவரது அறிக்கைகள் காங்கிரஸ் கட்சியால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன” என மழுப்பலாகக் கூறினார். மன்னிப்பு? இதனிடையே பாஜக அமைச்சர் இந்தர் சிங் ராஜா ராம் மோகன் ராய் தொடர் பாக தான் தெரிவித்த அவ தூறு கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
