தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கருத்துக்கு எதிராக முகநூலில் அவதூறு பதிவு

9 Dec 2025, 4:25 pm
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கருத்துக்கு எதிராக முகநூலில் அவதூறு பதிவு
<p><strong>சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கருத்துக்கு எதிராக முகநூலில் அவதூறு பதிவு</strong></p> <p>பதிவிட்ட நபர் மீது காவல் நிலையத்தில் புகார் மயிலாடுதுறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், &ldquo;பாஜக - அதிமுக அணியை தோற்கடிப்பதுதான் 2026 சட்டமன்றத் தேர்த லில் எங்களுடைய முதன்மையான பணி. எங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு திமுக எங்களுக்கு துணை நிற்கிறது. ஆட்சி அதிகாரத்தில் எப்போதுமே நாங்கள் &nbsp;பங்கு கேட்க மாட்டோம்&rdquo; என கடந்த வாரத்தில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி முகநூலில் பகிரப்பட்டது. &nbsp;இந்நிலையில் அந்த கருத்தை விமர்சனம் செய்கிற பெயரில், மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகிலுள்ள கருவாழக்கரை மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த &nbsp;வல்லரசு என்பவர் மிகவும் ஆபாசமாக கொச்சையாக பதி விட்டுள்ளார். &nbsp;இதுகுறித்து அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு &nbsp;உறுப்பினர் எஸ். துரைராஜ், ஒன்றியச் செயலாளர் கே.பி. &nbsp;மார்க்ஸ் மற்றும் கட்சியினர் &ldquo;Admk arasu&rdquo; என்ற பெயரில் &nbsp;முகநூலில் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிடும் &nbsp;வல்லரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செம்பனார்கோ வில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.