தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

7 Apr 2026, 5:38 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தஞ்சாவூரில்  கொட்டி தீர்த்த கோடை மழை

தஞ்சாவூர், ஏப். 7-   தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக, கோடையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து, எள், கடலை, பருத்தி ஆகிய பயிர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு:  பேராவூரணி 63 மி.மீ, ஒரத்தநாடு 54 மி.மீ, பூதலூர் 51 மி.மீ, வல்லம் 45 மி.மீ, மதுக்கூர் 45 மி.மீ, வெட்டிக்காடு 44 மி.மீ, அய்யம்பேட்டை 38 மி.மீ, திருவையாறு 31 மி.மீ, பாபநாசம் 29 மி.மீ, அணைக்கரை 20 மி.மீ பதிவானது.  திருக்காட்டுப்பள்ளி 19 மி.மீ, தஞ்சாவூர் 19 மி.மீ, கல்லணை 17 மி.மீ, குருங்குளம் 12 மி.மீ, நெய்வாசல் 12 மி.மீ, அதிராம்பட்டினம் 11 மி.மீ, கும்பகோணம் 8 மி.மீ, திருவிடைமருதூர் 6 மி.மீ, மஞ்சளாறு 6 மி.மீ என மாவட்டம் முழுவதும் மழை பதிவாகியுள்ளது.

நார்த்தாமலை  முத்துமாரியம்மன் கோவில்  தேர்த் திருவிழாவில் தொழிலாளி பலி

புதுக்கோட்டை, ஏப். 7-  புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் ஒருவர் பலியானார்.  புதுக்கோட்டை அருகே, நார்த்தாமலை ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை தேரோட்டம் நடந்த நிலையில், தேரை பக்தர்கள் இழுத்த போது சங்கலி அறுந்ததாக கூறப்படுகிறது.  அப்போது அறுந்த சங்கிலியை இணைக்க தாயினிப்பட்டியை சேர்ந்த தேருக்கு கட்டை போடும் தொழிலாளி மணிவண்ணன் (45) என்பவர், சம்பட்டியை எடுத்து சங்கிலியில் அடித்துள்ளார்.  அப்போது நிலைதடுமாறி தேரில் மோதியுள்ளார். அப்போது தேரில் இருந்த ஆணி அவர் தலையில் குத்தியதில் மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் மணிவண்ணனை மீட்டு சிகிச்சைக்காக நார்த்தாமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிவண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.  இதனையடுத்து கீரனூர் காவல்துறையினர் மணிவண்ணன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீரனூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதியில்  42 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு புதிய தமிழகம், 2 சுயேச்சை மனு தள்ளுபடி

திருச்சிராப்பள்ளி, ஏப். 7-  திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் மொத்தம் 276 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிகபட்சமாக 39 மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக முசிறி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.  செவ்வாயன்று தமிழகம் முழுவதும் வேட்பு மனு பரிசீலனை 11 மணிக்கு தொடங்கியது. வேட்பு மனு பரிசீலனைக்கு வந்த வேட்பாளர்கள் மற்றும் ஆதரவா ளர்களை காவல்துறையினர் சோதனை நடத்தி உள்ளே அனுமதித்தனர். திருச்சி கிழக்கு தொகுதியில், மாநகராட்சி மண்டல் 2 அலுவலகத்தில் கிழக்கு தொகுதி தேர்தல் பார்வையாளர் மது ஸ்மிதா சாஹீ, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியன் தலைமையில் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திமுக வேட்பாளர் இனிகோ ஆரோக்கியராஜ், அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் உள்ளிட்ட 20 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. சுயேச்சைகள் சூர்யா,அபிராமி ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதேபோன்று மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் கே. என்.நேரு, அமமுக வேட்பாளர் ராஜசேகரன் உள்பட 24 வேட்பாளர்களில் 22பேர் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கோ. சண்முகம் மற்றும் திமுக மாற்று வேட்பாளர் அன்பழகன் ஆகியோரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  ஸ்ரீரங்கத்தில், திமுக வேட்பாளர் துரைராஜ், திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஜெயங்கொண்டம் தொகுதியில் 29 வேட்பு மனுக்களில்  21 மனுக்கள் ஏற்பு - 8 மனுக்கள் நிராகரிப்பு

அரியலூர், ஏப். 7-  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகம் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்பு மனுக்களும், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்பட்டன.  இதில் 21 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 8 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

அரியலூர் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அரியலூர், ஏப். 7-  அரியலூர் சட்டமன்றத் தொகுதியில், 24 வேட்பாளர்கள் 26 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களின் மீதான பரிசீலனை செவ்வாயன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  அரியலூர் கோட்டாட்சியரும், அரியலூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலு வலருமான த. பிரமி, மனுக்களை பரிசீலனை  செய்து வெளியிட்டார். இதில் பிரதான கட்சி களின் வேட்பாளர்களான லதா பாலு (திமுக),  தாமரை எஸ். ராஜேந்திரன் (அதிமுக)  உள்ளிட்ட மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், சுயேட்சைகளாக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜோதிபாசு, குமார், வெற்றிவேல், இளையராஜா, ஆர். பாலமுரு கன், கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார் உள்ளிட்ட  ஏழு பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட் டது. சுயேட்சை வேட்பாளர்களான விஜய குமார் மற்றும் செல்வபதி ஆகிய இருவரின் மனுக்கள், 10 பேர் முன்மொழிவு இல்லா மல் குறைபாடு இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் பிரதான கட்சி வேட்பாளர்கள் மனு  ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அவர்களுக்கு மாற்று வேட்பாளராக தாக்கல் செய்யப்பட்டி ருந்த கென்னடி (திமுக  மாற்று), கணேசன் (அஇஅதிமுக மாற்று) காசிநாதன் (நாம் தமிழர் கட்சி மாற்று), சபரி ஆனந்தம் (பகுஜன்  சமாஜ் மாற்று) ஆகிய நான்கு பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.  வேட்பு மனு பரிசீலனை இறுதியில் 26  மனுக்களில், 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டு 18 வேட்பாளர்கள் தற்பொழுது களத்தில் உள்ளனர். ஏப். 9 ஆம் தேதி மாலை 3  மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுவை  வாபஸ் செய்து கொள்ள இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்னிலம் வேட்பாளர்  வாக்குச் சேகரிப்பு

திருவாரூர், ஏப். 7-   திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியம் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் முகமது முபாரக், இருசக்கர வாகன மூலம் சென்று அப்பகுதி மக்களிடம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.  நன்னிலம் ஒன்றியம் ஆண்டிபந்தலில் துவங்கிய பிரச்சார  பயணத்தில் பங்கேற்ற சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி. சுந்தரமூர்த்தி பிரச்சாரத்தை துவக்கி வைத்து உரை யாற்றினார்.  தொடர்ந்து ஸ்ரீவாஞ்சியத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சிபிஐ நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், உதயசூரியனுக்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.  வாக்குச் சேகரிப்பில் திமுக நன்னிலம் தெற்கு ஒன்றியச்  செயலாளர் வே. மனோகரன், திருவாரூர் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ஏ.எஸ். குமார், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் தியாகு.ரஜினிகாந்த், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெ. முகமது உதுமான் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர், ஏப். 7- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட படை நிலை ஊராட்சி 2 ஆவது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மின் மோட்டார் பழுது காரணமாக கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  படைநிலை பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 2 ஆவது வார்டில் உள்ள மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றி, 2 ஆவது வார்டு மற்றும் மூன்றாவது வார்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். இதில் மின் மோட்டார் பழுது காரணமாக தண்ணீர் வரவில்லை. மேலும் மூன்றாவது வார்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிறது. அதில் மின்மோட்டார் பொருத்தப்படாமல் உள்ளது. இதில் மின்மோட்டார் பொருத்தும் பட்சத்தில் மூன்றாவது வார்டு பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். ஆனால் ஊராட்சி நிர்வாகம் மின்மோட்டார் பொறுத்த பணம் இல்லை என்று அலட்சியம் காட்டி வருகின்றனர்.  இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் திடீரென காலி குடங்களுடன் காடுவெட்டி - ஆண்டிமடம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து சம்பவம் அறிந்த காவல்துறையினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.