தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டில் ஆயுர்வேத மருத்துவம் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் சுணக்கம்

24 Mar 2026, 3:23 pm
தமிழ்நாட்டில் ஆயுர்வேத மருத்துவம் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் சுணக்கம்
<p><strong>தமிழ்நாட்டில் ஆயுர்வேத மருத்துவம் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் சுணக்கம்</strong></p> <p>புதுதில்லி, மார்ச் 24- தமிழ்நாட்டில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி கள் மற்றும் மருத்துவமனைகளின் நிலை குறித்து &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு ஆயுஷ் &nbsp;அமைச்சகம் விரிவான பதில்களை அளித்துள்ளது. தனியார் ஆதிக்கம் - &nbsp;அரசு கல்லூரிகள் குறைவு அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்துள்ள பதிலின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 10 ஆயுர்வேத &nbsp;மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. &nbsp;இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், &nbsp;9 கல்லூரிகள் தனியார் வசம் உள்ளன. நாகர்கோவி லில் உள்ள கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் &nbsp;கல்லூரி மட்டுமே தற்போதைக்கு முழுமையான அரசு கல்லூரியாகச் செயல்படுகிறது. இந்த 10 கல்லூரிகளிலும் சேர்த்து ஆண்டுக்கு &nbsp;மொத்தம் 520 மாணவர்கள் இளங்கலை (BAMS) படிப்பில் சேர அனுமதி உள்ளது. தனியார் கல்லூரி களில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் &nbsp;நிலையில், அரசுத் துறையில் ஆயுர்வேதக் கல்வியை விரிவுபடுத்துவதில் ஒன்றிய மற்றும் &nbsp;மாநில அரசுகள் போதிய ஆர்வம் காட்டவில்லை என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. முதுகலை படிப்பு மற்றும் மருத்துவமனை வசதிகள் முதுகலை ஆயுர்வேதப் படிப்பைப் பொறுத்த வரை, சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் ஆயுர்வேத மருத்து வக் கல்லூரி மற்றும் திருப்பெரும் புதூரில் உள்ள ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி &nbsp;ஆயுர்வேதக் கல்லூரி ஆகிய இரண்டு தனியார் கல்லூரிகளில் மட்டுமே அதற்கான வசதிகள் உள்ளன. அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்புகள் &nbsp;இல்லாதது உயர்கல்வி கற்கும் மாணவர் களுக்குப் பின்னடைவாக உள்ளது. மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, தேசிய ஆயுஷ் மிஷன் (NAM) திட்டத்தின்கீழ் தமிழ் நாட்டில் திருவண்ணாமலை, தேனி மற்றும் புதுக் கோட்டை ஆகிய இடங்களில் மூன்று ஒருங்கி ணைந்த ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு ஒப்பு தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, ஏற்கனவே உள்ள 10 மருத்து வக் கல்லூரிகளுடன் இணைந்த கற்பித்தல் மருத்து வமனைகளும் பொது மக்களுக்குச் சேவையாற்றி &nbsp;வருகின்றன. மருத்துவர்கள் எண்ணிக்கை மற்றும் காலிப் பணியிடங்கள் தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 3,120 பதிவு &nbsp;செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் இருப்ப தாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மாவட்ட வாரியாக அல்லது மருத்துவமனை வாரியாக நிலவும் காலிப் பணியிடங்கள் குறித்த துல்லிய மான தகவல்களை அளிக்க ஒன்றிய அரசு மறுத்து விட்டது. பொது சுகாதாரம் என்பது மாநில அரசின் &nbsp;அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும், காலிப் பணியிடங்களை நிரப்புவது மாநில அரசின் பொறுப்பு என்றும் கூறி தனது கடமையிலிருந்து ஒன்றிய அரசு விலகிக் கொண்டது. ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., கருத்து ஒன்றிய அரசின் இந்தப் பதில் குறித்து ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக் கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை மேம்படுத்துவதாகத் தம்பட்டம் &nbsp;அடிக்கும் ஒன்றிய அரசு, நடைமுறையில் தனியார் &nbsp;கல்லூரிகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழகத்தில் அரசு ஆயுர்வேதக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். 3,120 மருத்துவர்கள் மட்டுமே இருப்பது &nbsp;மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமானது அல்ல. காலிப் பணியிடங்கள் குறித்த தரவுகளைச் சேக ரித்து, அவற்றை நிரப்ப மாநில அரசுக்குத் தேவை யான நிதி உதவியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் சாதாரண மக்களுக்கும் &nbsp;தரமான ஆயுர்வேத சிகிச்சை தடையின்றி கிடைக் கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.