தொடர்ந்து சரியும் நோட்டா வாக்கு சதவீதம்
5 May 2026, 10:21 pm

தொடர்ந்து சரியும் நோட்டா வாக்கு சதவீதம்

சென்னை, மே 5 - ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், நோட்டா எனப்படும் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற வாய்ப்புக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு முன் எந்த வேட்பா ளருக்கும் ஓட்டுப்போட விரும்பாதவர்கள் அதற் கான படிவம் 49ஓ (Form 49O)-வை நிரப்பி தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்கும் வசதி இருந்தது.

ஆனால் ஓட்டுரிமை ரகசியம் வெளியாவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, உச்ச நீதிமன்றத் தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் 11 அக்டோபர் 2013 முதல் இந்த வசதியை அறிமுகப்படுத்தியது.

தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கொண்டு வரப்பட்டுள்ள நோட்டா (NOTA - None of the Above) என்ற பட்டன் இந்த 49-ஓ விதியின் நீட்சியாகும்.

2013-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் களில் சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தில்லி மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் நோட்டா முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

அதே நேரம் தமிழ்நாட்டில் முதன்முதலில் 2013 டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை முதல் முறையாக 2014-இல் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 0.75% நோட்டாவிற்கு கிடைத் தது.

ஆனால் தற்போது (23.04.2026) நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 0.41% வாக்காளர்கள் மட்டுமே நோட்டாவை பயன்படுத்தி உள்ளனர்.

1,99,801 பேர் இந்த தேர்தலில் நோட்டாவிற்கு வாக் களித்து உள்ளனர். அதேபோல் தேர்தல் ஆணைய புள்ளிவிவரப் படி கடந்த 3 மக்களவைத் தேர்தல்களிலும் நோட்டா விற்கு வாக்களிப்போரின் எண்ணிக்கை படிப்படி யாக குறைந்து வருகிறது.

கடந்த 2014-இல் நடை பெற்ற மக்களவைத் தேர்தலில் 1.08 சதவீதமாக இருந்த நோட்டா, 2024 ஆம் ஆண்டு தேர்தலின் போது 0.99 சதவீதமாக குறைந்தது.