தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி பிரதமர் ஆன பின்பு நாடு முழுவதும் முஸ்லிம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி

7 May 2026, 8:46 pm
மோடி பிரதமர் ஆன பின்பு நாடு முழுவதும் முஸ்லிம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி

மோடி பிரதமர் ஆன பின்பு நாடு முழுவதும் முஸ்லிம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி

2014ஆம் ஆண்டு மோடி பிரத மர் ஆனார். அதன்பிறகு நாட்டில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் பெரு மளவு குறைந்துள்ளது. மோடி பிரத மர் ஆவதற்கு முன்பு, 2013ஆம் ஆண்டு முஸ்லிம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 339ஆக இருந்தது. ஆனால் தற்போது 282 ஆகக் குறைந்துள்ளது.

பெரிய மாநிலங்களில் கடும் சரிவு

முஸ்லிம் மக்கள் தொகை அதிகமாக உள்ள பெரிய மாநிலங்க ளிலேயே இந்த வீழ்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது. நாட்டி லேயே அதிக சட்டமன்றத் தொகுதி களை (403) கொண்ட உத்தரப்பிர தேசத்தில் முஸ்லிம் எம்எல்ஏக்க ளின் எண்ணிக்கை 63-லிருந்து 31 என்ற அளவில் பாதியாகக் குறைந்துள்ளது. உத்தரப்பிரதே சத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 19% ஆகும். ஆனால் பிரதிநிதித்துவம் 8% மட்டுமே.

அதே போல மேற்கு வங்க த்தில் முஸ்லிம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 59 லிருந்து 37 ஆகக் குறைந்துள்ளது. அங்கு முஸ்லிம் மக்கள் தொகை 27% என்ற நிலையில், எம்எல்ஏக்கள் பங்கு வெறும் 12.6% ஆகும். பீகாரில் 19 லிருந்து 11 ஆகவும், ராஜஸ்தான் மாநிலத்தில் 11-லிருந்து 6 ஆகவும் குறைந்துள்ளது.

அசாம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் முஸ்லிம்கள் இருந்தும், அங்கு 17% இடங்களை மட்டுமே முஸ்லிம் கள் கொண்டுள்ளனர். மகாராஷ்டி ரா, கர்நாடகா மாநிலங்களில் முஸ்லிம் எம்எல்ஏக்களின் பங்கு 4% மட்டுமே உள்ளது. இது அவர்களின் 10%-க்கும் அதிகமான மக்கள் தொகை விகிதத்தை விட மிகக் குறைவானது ஆகும்.

முஸ்லிம் எம்எல்ஏக்களே இல்லாத மாநிலங்களாக அரு ணாச்சலப் பிரதேசம், கோவா, இமாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 7 மாநிலங்கள் உள்ளன. ஜம்மு-காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கை யில் இருந்தாலும், அங்கும் 58-லிருந்து 51 ஆகக் குறைந்துள்ளது.

எனினும், சில மாநிலங்களில் மட்டும் சிறிய உயர்வு காணப்படு கிறது. தமிழ்நாட்டில் முஸ்லிம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 8-லிருந்து 9 ஆக உயர்ந்துள்ளது. மத்தியப் பிரதேசம், மேகால யாவிலும் சிறிய அளவிலான முன்னேற்றம் பதிவாகியுள்ளது.

முஸ்லிம் எம்எல்ஏக்கள் அதிகமுள்ள கட்சிகள்:

1. காங்கிரஸ் - 61

2 தேசிய மாநாட்டுக் கட்சி - 39

3. திரிணாமுல் காங்கிரஸ் - 34

4. சமாஜ்வாதி - 34

1,807 எம்எல்ஏக்களைக் கொண்ட பாஜகவில் தற்போது 2 முஸ்லிம் எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஒருவர் மணிப்பூரைச் சேர்ந்த அசாப் உதின், மற்றொ ருவர் திரிபுராவைச் சேர்ந்த தபஜ்ஜல் ஹொசைன் ஆவர். இது பாஜகவின் வகுப்புவாத அரசிய லின் கொடூரம் என அரசியல் விமர்சகர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.