தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இராமநாதபுரம் மாவட்டத்தை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திடுக! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

21 Nov 2025, 2:51 pm
இராமநாதபுரம் மாவட்டத்தை வேளாண்  பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திடுக!  குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
<p><strong>இராமநாதபுரம் மாவட்டத்தை வேளாண் &nbsp;பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திடுக! &nbsp;குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் கோரிக்கை</strong></p> <p>இராமநாதபுரம், நவ.21- இராமநாதபுரம் மாவட்டத்தை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை யன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.முத்துராமு பேசியதாவது: பருவமழை கை கொடுக்காத சூழலில் கடும் சிரமத்தில் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுப்பதில் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருகின்றனர். காலதாமதம் செய்யாமல் விவசாயக் கடன்களை உடனே வழங்க வேண்டும் நட வடிக்கை எடுக்க வேண்டும். &nbsp;கூட்டுறவு களில் தட்டுப்பாடு இன்றி உரம் வழங்கு வதை உறுதி செய்ய வேண்டும் .வெளிச் ்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவ தைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு உரிய முறையில் உரம் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்ததை போல இராம நாதபுரம் மாவட்டத்தையும் வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வேளாண் மண்டலம் குறித்த கேள்வி க்கு மாவட்ட ஆட்சித் தலைவர், சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் &nbsp;மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.